மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவர இருக்கிறது. 2023 ஜனவரி மாதத்தில் இருந்து அகவிலைப்படி மீண்டும் அதிகரிக்கப் போகிறது. ஹோலி பண்டிகைக்கு முன்னதாக இது குறித்து அரசு முடிவு எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மார்ச் 1ஆம் தேதி நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் அகவிலைப்படி உயர்வுக்கு ஒப்புதல் அளிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
சம்பள உயர்வு (Salary Hike)
மத்திய அரசு ஊழியர்களுக்கு மார்ச் மாத சம்பள நிலுவையுடன் சேர்த்து உயர்த்தப்பட்ட அகவிலைப்படியும் வழங்கப்படும். டிசம்பர் வரையிலான ஏஐசிபிஐ (நுகர்வோர் விலைக் குறியீடு) புள்ளி விவரங்களில் இருந்து இந்த முறை அகவிலைப்படி 4 சதவீதம் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. ஒருவேளை அகவிலைப்படி 4 சதவீதம் அதிகரிக்கப்பட்டால் ஊழியர்களின் சம்பளத்தில் நல்ல உயர்வு இருக்கும். தற்போது அகவிலைப்படி 38 சதவீதமாக உள்ளது. இது 42 சதவீதமாக அதிகரிக்கும்.
ஜனவரியில் அகவிலைப்படி அதிகரிப்பின் அடிப்படையில் சம்பளம் கணக்கிடப்படும். இதன் மூலம் மத்திய அரசின் சுமார் ஒரு கோடி ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள். ஜூலை முதல் டிசம்பர் வரை, ஏஐசிபிஐ குறியீட்டின் அதிகபட்ச மதிப்பு 132.5 புள்ளிகளாக உள்ளது. அதன் அடிப்படையில் 4 சதவீத அகவிலைப்படி உயர்வு நிச்சயம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
மேலும் படிக்க: மண்புழு உரம் தயாரிப்பு முறையை வேளாண் மாணவர்கள் செயல் விளக்கம்
UPSC ஆட்சேர்ப்பு 2023: விண்ணப்பிக்க கடைசித் தேதி பிப்ரவரி 21
அகவிலைப்படி (Allowance)
தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு 38 சதவீத அகவிலைப்படி வழங்கப்படுகிறது. இதில் 4 சதவீத உயர்வு இருந்தால் 42 சதவீதமாக உயரும். இதற்குப் பிறகு, ரூ.18,000 அடிப்படைச் சம்பளம் உள்ளவர்களின் ஆண்டு அகவிலைப்படி ரூ.90,720 ஆக அதிகரிக்கும். தற்போதைய அகவிலைப்படியுடன் ஒப்பிட்டால், சம்பளம் ஒவ்வொரு மாதமும் ரூ.720 மற்றும் ஆண்டுக்கு ரூ.8640 அதிகரிக்கும்.
மேலும் படிக்க
PF கணக்கை மாற்றும் வழிமுறைகள்: தெரிந்து கொள்ளுங்கள்!
குரூப் 4 தேர்வு முடிவுகள்: வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த TNPSC!
Share your comments