தமிழகத்தில் ஏப்ரல் 16 ஆம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு மூலம் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் வியாழன், வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை என தொடர்ந்து 4 நாட்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதனால் மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
தமிழகத்தில் வரும் 14 ஆம் தேதி சித்திரை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. இதனால், அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு அடுத்த நாள் வெள்ளிக்கிழமை ஏப்ரல் 15 ஆம் தேதி கிறிஸ்தவ பண்டிகையான புனித வெள்ளி கொண்டாடப்படுகிறது. ஆகையால் இந்த இரு நாட்களும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சனிக்கிழமை ஒரு நாள் மட்டும் பள்ளிகள் செயல்பட்டு அதற்கு அடுத்த நாளான ஞாயிற்றுகிழமை பள்ளிகளுக்கு வார விடுமுறை வருகிறது. இதை அடுத்து சனிகிழமையும் சேர்த்து விடுமுறை அளித்தால் நன்றாக இருக்கும் என ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகளின் எதிர்பார்ப்பாக இருந்தது. அதனை நிறைவேற்றம் வகையில், தற்போது தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிவிப்பில், சனிக்கிழமை ஏப்ரல் 16 ஆம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுக்குறித்து வெளியான அறிவிப்பில், தமிழகத்தில் வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி தமிழ்ப் புத்தாண்டும், ஏப்ரல் 15 ஆம் தேதி புனித வெள்ளியும் கொண்டாடப்படுகிறது.
வியாழன் மற்றும் வெள்ளிக் கிழமைகள் அரசு விடுமுறை என்பதால், இதைத் தொடர்ந்து வரும் சனிக்கிழமையும் அரசு விடுமுறையாக பள்ளி கல்வி ஆணையர் அறிவித்துள்ளார். இதன்மூலம், தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் வியாழன், வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை என தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறையாக அறிவிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 18 ஆம் தேதி வழக்கம் போல பள்ளிகள் செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றுக்கு பிறகு பள்ளிக்கு சென்றுள்ள மாணவர்களுக்கு, மீண்டும் 4 நாட்கள் தொடர் விடுமுறை கிடைத்துள்ளதால் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
மேலும் படிக்க..
Share your comments