1. செய்திகள்

கஷ்டமே இல்லாம மின் இணைப்பில் பெயர் மாற்றம் செய்ய சூப்பர் சான்ஸ்

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan
Special camp across TN for name change in electricity connection

தமிழ்நாடு முழுவதும் வீட்டு மின் இணைப்பு மற்றும் பொது மின் இணைப்புத் தாரர்களுக்கென “சிறப்பு பெயர் மாற்றம் முகாம்” நேற்று தொடங்கிய நிலையில் ஒரு மாத காலம் வரை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் அனைத்து பிரிவு அலுவலகங்களிலும் நடைப்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின் இணைப்புகளில் பெயர் மாற்றம் செய்ய மின்வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தினை பயன்படுத்தலாம். இருப்பினும் அவற்றில் பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களை கருத்தில் கொண்டு 24.07.2023 முதல் ஒரு மாதக்காலத்திற்கு  சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை மற்றும் பண்டிகை விடுமுறை தவிர்த்து அனைத்து வேலை நாட்களிலும் (காலை 9 முதல் மாலை 5 வரை) இந்த முகாம் நடைப்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெயர் மாற்றம் சிறப்பு முகாமில் சமர்பிக்க வேண்டிய ஆவணங்கள் விவரம் பின்வருமாறு-

முன்னோர் இறப்பின் காரணமாக பெயர் மாற்றம் செய்யும் விண்ணப்பத்தாரர்கள் சமர்பிக்க வேண்டிய ஆவணங்கள் விவரம் பின்வருமாறு-

  • ஆதார் அட்டை
  • நகராட்சி, மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சமீபத்திய சொத்து வரி ரசீது நகல் அல்லது உரிமை ஆவணத்தின் நகல்
  • நகராட்சி, மாநகராட்சி அல்லாத இதர பகுதிகளுக்கு உரிமை ஆவணத்தின் நகல்
  • செட்டில்மெண்ட் பத்திரம் அல்லது பகிர்வு பத்திரம் சமர்பிக்கப்படாவிட்டால், சட்டப்பூர்வ வாரிசு சான்றிதழின்படி அனைத்து சட்டப்பூர்வ வாரிசுகளின் பெயர்களிலும் பெயர் மாற்றம் செய்யப்படும்.

குழு வீடுகளில் பொது சேவைகளுக்கான மின் இணைப்புகளில் (வீதப்படி ID) பெயர் மாற்றம் செய்யும் விண்ணப்பதாரர்கள் சமர்பிக்க வேண்டிய ஆவணங்கள் விவரம் பின்வருமாறு-

  • நலவாழ்வு சங்கத்தின் பெயரில் பதிவு சான்றிதழ் அல்லது வளாகம்/அப்பார்ட்மெண்ட் பெயருக்கு மாற்ற, விண்ணப்பத்தில் கையொப்பமிட குடியிருப்பாளர்களிடமிருந்து அதிகாரப்பூர்வ கடிதம்

பில்டர்கள்/ டெவலப்பர்கள் பெயரில் இருக்கும் பல குடியிருப்புகள்/ குடியிருப்பு வளாகங்கள்/ குரூப் ஹவுஸிங்கில் உள்ள பொது சேவைகளுக்கான மின் இணைப்புகளுக்கு பெயர் மாற்றம் செய்ய பின்வரும் ஆவணங்கள் சமர்பிக்கப்பட வேண்டும்.

மேலும் படிக்க: 

PM Kisan 14வது தவணை விடுவிப்பு: ஏதேனும் சிக்கல் இருப்பின் இதோ ஹெல்ப்லைன் எண்

வளாகத்தின் விற்பனையின் காரணமாக பெயர் மாற்றம் செய்யும் விண்ணப்பத்தாரர்கள் சமர்பிக்க வேண்டிய ஆவணங்கள்

  • ஆதார் அட்டை
  • நகராட்சி, மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சமீபத்திய சொத்து வரி ரசீது நகல் அல்லது விற்பனைப் பத்திரத்தின் நகல் அல்லது ஏதேனும் செல்லுபடியாகும் ஆவணம் (பரிசு பத்திரம்/ செட்டில்மெண்ட் பத்திரம் போன்றவை அல்லது நீதிமன்ற உத்தரவு
  • நகராட்சி, மாநகராட்சிக்குட்பட்ட பகுதி அல்லாத நிலையில், விற்பனைப் பத்திரத்தின் நகல் அல்லது ஏதேனும் செல்லுபடியாகும் ஆவணம் ( பரிசு பத்திரம்/ செட்டில்மெண்ட் பத்திரம் போன்றவை) அல்லது நீதிமன்ற உத்தரவு

விண்ணப்பதாரர் மேலே குறிப்பிட்டுள்ள தேவையான ஆவணங்களுடன் பிரிவு அலுவலகத்தில், நேரிலோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ பெயர் மாற்றத்திற்கு விண்ணப்பிக்கலாம். இதற்கான நிர்ணயிக்கப்பட்ட தொகை ரூ.726 (இதில் சேவைக் கட்டணமாக ரூ.615 மற்றும் ஜிஎஸ்டிக்கு ரூ.111 அடங்கும்). பொதுமக்கள் இந்த நேரடி சிறப்பு முகாமினை பயன்படுத்தி மின் இணைப்பு பெயர் மாற்ற தேவையினை பூர்த்தி செய்து பயனடையுமாறு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் காண்க:

சம்பளத் தாரர்களுக்கு நற்செய்தி- PF வட்டி விகிதம் உயர்வு

புதிய காற்றழுத்த தாழ்வு- 7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

English Summary: Special camp across TN for name change in electricity connection Published on: 25 July 2023, 05:23 IST

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.