மஹிந்திரா டிராக்டர்ஸ் வழங்கும் இந்தியாவின் மில்லினியர் ஃபார்மர் விருதுகள் (டிசம்பர் 6, 2023) புதன்கிழமையான இன்று புதுதில்லியில் உள்ள ஐஏஆர்ஐ, மேளா மைதானத்தில் பிரம்மாண்டமாக தொடங்கியது. விருது நிகழ்வுடன் வேளாண் கண்காட்சியும் நடைப்பெறும் நிலையில் மஹிந்திரா டிராக்டர்ஸ் அதன் சிறந்த மாடல்களை கண்காட்சியில் காட்சிப்படுத்தியுள்ளது.
க்ரிஷி ஜாக்ரான் மற்றும் Agriculture world இணைந்து மில்லியனர் ஃபார்மர் ஆஃப் இந்தியா (MFOI) விருது வழங்கும் நிகழ்வுக்கு விவசாயிகளின் நம்பகமான மற்றும் இந்தியாவின் நம்பர் 1 டிராக்டர் நிறுவனமான ”மஹிந்திரா டிராக்டர்ஸ்” MFOI 2023 நிகழ்வுக்கான முதன்மை மற்றும் டைட்டில் ஸ்பான்ஸராக இணைந்துள்ளது ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கண்காட்சியில் இடம்பெற்றுள்ள மஹிந்திராவின் டிராக்டர்ஸ் பட்டியலில் சிலவற்றின் விவரம் பின்வருமாறு-
மஹிந்திரா 585 YUVO TECH+ டிராக்டர்:
மஹிந்திரா 585 YUVO TECH+ டிராக்டர் என்பது வலுவான செயல்திறனுக்காக வடிவமைக்கப்பட்ட ஒரு பவர்ஹவுஸ் ஆகும். எஞ்ஜின் - 36.75 kW (49.3 HP), கொள்ளளவு (capacity) - 1700 கிலோ. இந்த டிராக்டரின் தனித்துவமான அம்சம் அதன் 33.9 kW (45.4 HP) PTO சக்தியாகும். நான்கு சிலிண்டர் ELS இன்ஜின் அதன் உயர்ந்த மைலேஜ் தன்மையினை கொண்டுள்ளது.
மஹிந்திரா OJA 3140 டிராக்டர்:
Mahindra OJA 3140 டிராக்டர் என்பது விவசாய பணிகளுக்கு ஏற்ற ஒரு வலுவான டிராக்டர் ஆகும். எஞ்ஜின் - 29.5 kW (40 HP). 12x12 டிரான்ஸ்மிஷன் சிஸ்டம் பல்வேறு வகையான விவசாயப் பணிகளை துல்லியமாகவும் திறமையாகவும் கையாளும் திறனை மேம்படுத்துகிறது.
மஹிந்திரா NOVO 605 DI 4WD V1 டிராக்டர்கள்: மஹிந்திரா NOVO 605 DI 4WD V1 டிராக்டர்கள் விவசாய நிலங்களை மேம்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட சக்திவாய்ந்த டிராக்டராக உள்ளன.
அவற்றின் எஞ்ஜின் திறன் 41.0 kW (55 HP), mBoost மற்றும் நான்கு சிலிண்டர்கள் பொருத்தப்பட்டிருக்கும். இந்த டிராக்டர்கள் பவர் ஸ்டீயரிங் மூலம் மேம்படுத்தப்பட்ட திறனை உள்ளடக்கியுள்ளது. 2700 கிலோ எடையுள்ள ஹைட்ராலிக் தூக்கும் திறன் கொண்ட இந்த இயந்திரங்கள் கடினமான பணிகளைக் கையாளும் வகையில் பொருத்தப்பட்டுள்ளன. தாராளமாக ஆறு வருட உத்தரவாதம் மற்றும் 400 மணி நேர நீண்ட சேவை இடைவெளியுடன் இணைந்து நம்பகத்தன்மை மற்றும் நீடித்த தன்மையை உறுதி செய்கிறது. குறிப்பிடத்தக்க வகையில், அவற்றின் குறைந்த எரிபொருள் நுகர்வு, ஒரு வசதியான இருக்கை விவசாயிகளின் விருப்பமான டிராக்டராக திகழ்கிறது.
மஹிந்திரா NOVO 655 DI PP V1 டிராக்டர் :
மஹிந்திரா NOVO 655 DI PP V1 டிராக்டரில் 50.7 kW (68 HP) mBoost இன்ஜின் மற்றும் பவர் ஸ்டீயரிங் உள்ளது. இந்த 2WD டிராக்டர் வலுவான செயல்திறன் மற்றும் மேம்பட்ட சூழ்ச்சியை வழங்குகிறது.
2700 கிலோ ஹைட்ராலிக் தூக்கும் திறன் கொண்ட, இந்த மஹிந்திரா NOVO 655 DI PP V1 டிராக்டர், கடினமான பணிகளைச் சமாளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. டூயல் (SLIPTO) கிளட்ச் மற்றும் FWD ரெவ் ஷட்டிலுடன் கூடிய மென்மையான சின்க்ரோமேஷ் டிரான்ஸ்மிஷன் சிஸ்டம் உள்ளிட்ட அம்சங்களும் அடங்கியுள்ளது. இவைத் தவிர மஹிந்திரா மகாவட்டர், மஹிந்திரா ஒஜா 2121 டிராக்டர், மஹிந்திரா நோவா 755 DI PP 4WD V1 டிராக்டர், போன்றவையும் கண்காட்சி அரங்கில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இதையும் காண்க:
Share your comments