மின் கட்டண உயர்வினை நிறுத்தி வைக்க வேண்டும் எனத் தமிழகப் பின்னலாடை தொழில் கூட்டமைப்பின் சார்பில் தமிழக முதல்வருக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான தகவலை இப்பதிவு விளக்குகிறது.
திருப்பூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரக்கூடிய பின்னலாடைத் துறை சார்ந்த நிறுவனங்கள் மூலம் சுமார் 10 லட்சம் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெறுகின்றனர். இந்த நிலையில் கொரோனா தொற்று மற்றும் நூல் விலை உயர்வு உள்ளிட்ட பிரச்சனைகளால் உற்பத்தி சரிந்து பல இடங்களில் சிறிய அளவில் செயல்பட்டு வந்த நிறுவனங்கள் மூடியிருக்கின்றன.
மேலும் படிக்க: பெண்களுக்கு ரூ. 6000 கிடைக்கும் மத்திய அரசின் திட்டம்: இன்றே அப்ளை பண்ணுங்க!
மேலும் ஜிஎஸ்டி வரி விதிப்பு போன்றவற்றிலிருந்து மீண்டு வரக்கூடிய இந்த நிலையில், தற்பொழுது தமிழக அரசு மின் கட்டண உயர்வை அறிவித்துள்ளது. இந்த நிலையில், பின்னலாடைத் துறை கடும் பின்னடைவை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக தொழில் துறையினர் கூறி வருகின்றனர்.
தமிழக அரசு அறிவித்துள்ள மின் கட்டண உயர்வை நிறுத்தி வைக்க வேண்டும் எனத் திருப்பூர் பின்னலாடை தொழில் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முத்துரத்தினம் தமிழக முதல்வருக்கு மனு அனுப்பியுள்ளார். அதில், பனியன் தொழில் நகரான திருப்பூரில் வருடத்துக்கு சுமார் ரூ.30,000 கோடிக்கு ஏற்றுமதி நடைபெற்று வருகிறது. அதோடு, சுமார் ரூ.30 கோடிக்கு உள்நாட்டு வர்த்தகம் நடைபெற்று வருகிறது.
மேலும் படிக்க: PM Kisan: ரூ. 2000 பற்றித் தெரிந்துகொள்ள இந்த நம்பரை அழையுங்க!
மொத்தமாக ஆண்டுக்கு 60,000 கோடி மதிப்பிலான வர்த்தகம் திருப்பூரில் நடைபெறுகிறது. கடந்த 10 ஆண்டுகளாக தொடர்ச்சியாக பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, கொரோனா, பனியன் தொழிலின் மூலப் பொருளான நூல் விலையில் நிலையின்மை, 50% தொழிலாளர்கள் பற்றாக்குறை உள்ளிட்ட பிரச்சனைகள் இருப்பினும் பனியன் தொழிலினைச் சமாளித்து வருவதாகக் கூறப்பட்டுள்ளது.
திருப்பூர் 90% சிறு, குறு நடுத்தர தொழில்களைச் சார்ந்து இருக்கிறது. எஞ்சி இருக்கக் கூடிய 10% மட்டுமே பெரிய நிறுவனங்கள் ஆகும். அவர்களுடைய சொந்த சூரிய ஆலை மற்றும் காற்றாலை நிறுவனங்களின் மூலம் மின் கொள்முதல் செய்து தங்களது தேவையினைப் பூர்த்திச் செய்து கொண்டு வருகின்றனர். இருப்பினும் 90% சிறு குறு தொழில் உற்பத்தியாளர்கள் முழுக்க முழுக்க தமிழக மின்சார வாரியத்தினை நம்பி தொழில் செய்யும் நிலையில் உள்ளனர்.
மேலும் படிக்க: SBI வங்கியில் காலிப்பணியிடங்கள்! இன்றே விண்ணப்பியுங்க!!
தற்போதுள்ள நிலையில் 70% நிறுவனங்கள் மூடப்பட்டிருக்கின்றன. எஞ்சி இருக்கக் கூடிய 30% நிறுவனங்கள் மட்டுமே இயங்கிக் கொண்டிருக்கின்றன. தமிழக அரசின் மின்சாரக் கட்டண உயர்வால் அந்த 30% தொழில் செய்பவர்களும் மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே அதனைச் சார்ந்த ஒட்டுமொத்த உப தொழில் செய்யும் நூற்பாலை, நிட்டிங் டைமிங், காம்பேக்டிங் பிரிண்டிங், எம்ராய்டரி முதலான தொழில்களும் பாதிப்பிற்கு உள்ளாகும் நிலையில் இருக்கின்றன.
லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. ஆகவே தங்கள் தலைமையில் உள்ள தமிழக அரசு சமீபத்தில் ஏற்றிய மின் கட்டண உயர்வு திருப்பூர் தொழிலுக்கு அதிகமாக அழுத்தத்தினைக் கொடுக்கும். அந்த மின்கட்டண உயர்வினை திருப்பூர் பனியன் தொழில், மற்றும் தொழிலாளர்களின் நலன் கருதி திரும்பப் பெற வேண்டும் எனத் திருப்பூர் பின்னலாடை தொழில் கூட்டமைப்பு சார்பாக கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் படிக்க
Share your comments