CUET ஐப் பொறுத்தவரை, அதிக எண்ணிக்கையிலானவர்கள் உத்தரப் பிரதேசத்திலிருந்தும் (74,527), தொடர்ந்து டெல்லி (44,685) மற்றும் பீகாரில் (17,145) இருந்தும் பதிவு செய்துள்ளனர் எனத் தெரிய வருகிறது. ஹரியானாவிலிருந்து 15,000 எனும் எண்ணிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் மேற்கு வங்கம் ஆகியவை அதிக பதிவு பெற்ற மற்ற மாநிலங்கள் ஆகும்.
44 மத்தியப் பல்கலைக்கழகங்களுடன் தொடங்கப்பட்ட CUET, இப்போது நாட்டில் உள்ள 72 பல்கலைக்கழகங்களுக்கான சேர்க்கைத் தேர்வாக நடைபெற உள்ளது. இதில் எட்டு பல்கலைக்கழகங்கள், எட்டு நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் மற்றும் 12 தனியார் பல்கலைக்கழகங்கள் அடங்கும்.
மாநிலப் பல்கலைக்கழகங்களில் டெல்லி டாக்டர் பி ஆர் அம்பேத்கர் பல்கலைக்கழகம், ஜிவாஜி பல்கலைக்கழகம் மற்றும் சர்தார் படேல் காவல் பாதுகாப்பு மற்றும் குற்றவியல் நீதிப் பல்கலைக்கழகம் ஆகியவை அடங்கும், அதே சமயம் காந்திகிராம் கிராமப்புற நிறுவனம், டாடா சமூக அறிவியல் நிறுவனம் மற்றும் தேசிய ரயில் மற்றும் போக்குவரத்து நிறுவனம் ஆகியவையும் அடங்கும். அதோடு, தனியார் பல்கலைக்கழகங்களில் பென்னட் பல்கலைக்கழகம், பிஎம்எல் முஞ்சால் பல்கலைக்கழகம் மற்றும் எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம் ஆகியவையும் அடங்கும்.
கடந்த வாரத்தில் CUETக்கான பதிவு கணிசமாக உயர்ந்துள்ளது. மேலும் பல பல்கலைக்கழகங்களும் இணைந்துள்ளன. நேரமின்மை காரணமாக இந்த ஆண்டு தேர்வில் அதிகாரப்பூர்வமாகச் சேராமல், சேர்க்கையின் போது CUET மதிப்பெண்களை ஏற்கக்கூடிய மற்றவர்கள் உள்ளனர். ஜூன் மாதத்திற்கு மாற்றியமைக்கப்பட்ட JEE (முதன்மை) அமர்வுக்கான பதிவு ஒரு வாரத்திற்கு மீண்டும் திறக்கப்பட்டு உள்ளது. இந்த காலகட்டத்தில் கிட்டத்தட்ட 1.5 லட்சம் பதிவுகள் பெறப்பட்டு உள்ளன.
NTA ஆதாரங்களின்படி, NEET-UG க்கான விண்ணப்பம் இந்த ஆண்டு 17 லட்சத்தைத் தாண்டும், இது நாட்டிலேயே எந்தவொரு போட்டித் தேர்வுக்கும் இல்லாத அளவில் விண்ணப்பங்களின் எண்ணைக்கையை விட அதிகமாக இருக்கிறது. கடந்த ஆண்டு 16 லட்சத்திற்கும் அதிகமான விண்ணப்பதாரர்கள் பதிவு செய்திருந்தனர். ஏப்ரல் 28, 2022 நிலவரப்படி, அதிக எண்ணிக்கையிலான விண்ணப்பதாரர்கள் மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், கர்நாடகா, ராஜஸ்தான் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள், அதே நேரத்தில் கோட்டா (29,700) மாவட்டங்களில் அதிக எண்ணிக்கையிலான விண்ணப்பங்கள் விண்ணப்பிக்கப்பட்டு உள்ளன.
இந்நிலையில் எத்தனை மாணவர்கள் தேர்ச்சிப் பெற்று எந்த எந்த பல்கலைக் கழகங்களில் சேர்க்கை பெற போகின்றார்கள் என்பது நோக்கப்பட வேண்டியது. இந்த ஆண்டு புதிதாகத் தொடங்கப்பட்ட தேர்வாக CUET உள்ளது. எந்த மாநிலத்திலிருந்து அதிகமான எண்ணிக்கையில் மாணவர்கள் தேர்ச்சிப்பெற்று நாட்டின் மிக முக்கிய பல்கலைக்கழகங்களில் சேரப் போகின்றனர் என்பது அனைவராலும் எதிர்ப்பார்க்கப்படும் ஒரு தகவலாக உள்ளது.
மேலும் படிக்க
CUET நுழைவுத் தேர்வுக்கு தமிழகம் எதிர்ப்பு!
TCS 2022: TCS பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்! முன் அனுபவம் தேவையில்லை!!
Share your comments