பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டங்களில் எத்தகைய மானியம் இருக்கிறது என்பது குறித்துச் செங்க்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் விளக்கமளித்துள்ளார். இது குறித்த விரிவான தகவல்களை இப்பதிவில் பார்க்கலாம்.
மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, காஞ்சிபுரம் நீலாங்கரை அலுவலகத்தின் மூலமாகப் பிரதம மந்திரியின் மீன்வள மேம்பாட்டுத் திட்டங்களில் பயன்பெறலாம் எனச் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் அறிவித்து இருக்கிறார்.
இது குறித்து செங்கல்பட்டு ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் குறிப்பிட்டப்படி, உதவி இயக்குநர் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, காஞ்சிபுரம் (இருப்பு) நீலாங்கரை அலுவலகத்தின் மூலம் பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டங்களில் பயன்பெற மீனவ பயனாளி, மீனவ விவசாயிகள் புதிய மீன்குஞ்சு வளர்ப்பு குளங்கள் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் அமைத்தல் திட்டத்தின் அடிப்படையில் ஒரு ஹெக்டேருக்குப் பொதுப் பிரிவினருக்கு 40 சதவீத மானியம் மற்றும் ஆதிதிராவிடர், மகளிருக்கு 60 சதவீத மானியம் வழங்கப்பட இருக்கிறது.
திய மீன்வளர்ப்பு குளங்கள் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் அமைத்தல் எனும் திட்டத்தின் அடிப்படையில், ஒரு ஹெக்டேருக்குப் பொதுப்பிரிவினருக்கு 40 சதவீதம் மானியம் மற்றும் ஆதிதிராவிடர் பிரிவினருக்கும், மகளிருக்கும் 60 சதவீத மானியம் வழங்கப்பட இருக்கிறது.
சிறிய அளவிலான பயோபிளாக் குளங்களில் ரூ.7½ லட்சம் மதிப்பீட்டில் மீன்வளர்த்திட ஒரு ஹெக்டேருக்குப் பொதுப்பிரிவினருக்கு 40 சதவீத மானியம் மற்றும் ஆதிதிராவிடர், மகளிருக்கு 60 சதவீத மானியம் வழங்கப்பட இருக்கிறது. நன்னீர் மீன்வளர்ப்பிற்கான நடுத்தர அளவிலான பயோபிளாக் குளங்கள் அமைத்தல், உள்ளீட்டு மானியம் வழங்கும் திட்டத்தினில் ஒரு அலகிற்கான ரூ.14.லட்சம் செலவினத்தில் பொதுப் பிரிவினருக்கு 40 சதவீத மானியமும் ஆதிதிராவிடர் பிரிவினருக்கு 60 சதவீத மானியமும் வழங்கப்பட இருக்கிறது.
ஒருங்கிணைந்த அலங்கார மீன்வளர்ப்பு அலகு (நன்னீர் மீன்களை இனப்பெருக்கம் மற்றும் வளர்த்தல்) ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் அமைத்தல் திட்டத்தில் ஒரு அலகிற்குப் பொதுப் பிரிவினருக்கு 40 சதவீத மானியம் எனும் அளவில் ஆதிதிராவிடர், மகளிர் பிரிவினருக்கு 60 சதவீத மானியம் வழங்கப்பட இருக்கிறது.
கொல்லைப்புற அலங்கார மீன்வளர்ப்பு அலகு ரூ.3.லட்சம் மதிப்பீட்டில் அமைத்தல் திட்டத்தில் ஒரு அலகிற்கு பொதுப் பிரிவினருக்கு 40 சதவீத மானியம் மற்றும் ஆதிதிராவிடர், மகளிருக்கு 60 சதவீத மானியம் வழங்கப்பட இருக்கிறது. மீன்விற்பனை அங்காடி ரூ.10.லட்சம் மதிப்பீட்டில் அமைத்தல் எனும் திட்டத்தின் கீழ்ப் பொதுப் பிரிவினருக்கு 40 சதவீத மானியம் மற்றும் ஆதிதிராவிடர், மகளிர் பிரிவினருக்கு 60 சதவீத மானியம் வழங்கப்பட இருக்கிறது.
குளிர்காப்பிடப்பட்ட நான்கு சக்கர வாகனம் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் வாங்கிடும் திட்டத்தின் அடிப்படையில் ஒரு அலகுக்குப் பொதுப் பிரிவினருக்கு 40 சதவீத மானியமும் ஆதிதிராவிடர், மகளிருக்கு பிரிவினருக்கு 60 சதவீத மானியம் வழங்கப்பட இருக்கின்றது. குளிர்காப்பு பெட்டியுடன் கூடிய மூன்று சக்கர வாகனம் வழங்கும் திட்டத்தினில் ரூ.3.லட்சம் மதிப்பீட்டில் ஒரு அலகிற்குப் பொது பிரிவினருக்கு 40 சதவீத மானியமும் ஆதிதிராவிடர் பிரிவினருக்கு 60 சதவீத மானியமும் வழங்கப்பட இருக்கிறது எனத் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் படிக்க
Share your comments