1. செய்திகள்

10 நகரங்களில் வெயில் சதம் வானிலை மையம் தகவல்

Harishanker R P
Harishanker R P

தமிழகத்தில் நேற்று மாலை நிலவரப்படி, வேலுார், மதுரை உள்ளிட்ட 10 நகரங்களில், 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பம் பதிவானது' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன் அறிக்கை:

தமிழகத்தில் நேற்று காலை வரையிலான 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் மாம்பழத்துறையாறு, அணைகெடங்கு பகுதிகளில் தலா 8 செ.மீ., மழை பெய்து உள்ளது.

4 செ.மீ., மழை

இதற்கு அடுத்தபடியாக, கன்னியாகுமரி மாவட்டம் அடையாமடையில் 6; ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் 5; கன்னியாகுமரி மாவட்டம், சுருளக்கோடு, நாகர்கோவில், முக்கடல் அணை பகுதியில் தலா, 4 செ.மீ., மழை பதிவாகிஉள்ளது. தமிழக தென் மாவட்டங்களின் கடலோர பகுதிகளின் மேல், ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அத்துடன் வளிமண்டல கீழடுக்கில், இரு காற்று சந்திப்பு நிலவுகிறது.

இதன் காரணமாக, தமிழகத்தில் ஒரு சில இடங்கள், புதுச்சேரி, காரைக்காலில் இன்று இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் 29 வரை மிதமான மழை தொடர வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் ஒரு சில இடங்களில், நாளை மறுதினம், 26 வரை அதிகபட்ச வெப்பநிலை, வழக்கத்தைவிட, 3 டிகிரி செல்ஷியஸ் கூடுதலாக பதிவாகலாம். வெப்பம் அதிகரிப்பு, ஈரப்பதம் அதிகரிப்பு போன்றவற்றால், வெளியில் செல்வோருக்கு அசவுகரியம் ஏற்படும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்ஷியஸ் வரை பதிவாகலாம்.

40.1 டிகிரி செல்ஷியஸ்

நேற்று மாலை நிலவரப்படி, தமிழகத்தில் அதிகபட்சமாக, வேலுாரில், 104 டிகிரி பாரன்ஹீட், அதாவது, 40.1 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவானது.

இதற்கு அடுத்தபடியாக, கரூர் பரமத்தி, திருச்சியில், தலா, 103 டிகிரி பாரன்ஹீட் அதாவது, 39 டிகிரி செல்ஷியசுக்கு மேலும், தர்மபுரி, ஈரோடு, மதுரை விமான நிலையம், சேலம், தஞ்சாவூர், திருப்பத்துார், திருத்தணி ஆகிய நகரங்களில், 100 டிகிரி பாரன்ஹீட் அதாவது, 38 டிகிரி செல்ஷியசுக்கு மேலும் வெப்பம் பதிவானது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related links:

ஒரு மாத சம்பளம் இல்லையென்றால் நீங்கள் வேலைக்கு வருவீர்களா? அதிகாரிகளை வறுத்தெடுத்த விவசாயிகள்

நெல் கொள்முதல் நிலையங்களில் ஆளுங்கட்சியினர் ஆதிக்கம்: கலெக்டர் நடவடிக்கை எடுக்க விவசாயிகள் வலியுறுத்தல்

English Summary: Tamil Nadu enters into intense heat wave conditions

Like this article?

Hey! I am Harishanker R P. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.