சிறுதொழிலுக்கு பாதகம் ஏற்படாமல் ஆண்டிற்கு ஆறு மாதம் மட்டும் சுருக்குமடி வலைகளை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் தமிழக அரசுக்கு மீனவ அமைகப்புகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
அமைச்சருடன் மீனவ அமைப்புகள் ஆலோசனை (Fisheries organizations Discuss with Minister)
சென்னை தலைமைச் செயலகத்தில் சுருக்குமடி வலை பயன்பாட்டினை கட்டுப்படுத்துதல் தொடர்பான கலந்தாலோசனை கூட்டம் மாண்புமிகு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கடலூர், நாகப்பட்டினம் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், சுருக்குமடி வலைகளை பயன்படுத்துவதால் அவ்வப்போது மீனவர்களிடையே மோதல்கள் ஏற்பட்டு வருவதையும் இதனால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படுகிறது என்றார். இத்தகைய சுருக்குமடி வலைகளை பயன்படுத்த நாடுமுழுவதும் தடை உள்ளது மேலும் நீதிமன்றம் இத்தகைய வலைகளை பயன்படுத்தக் கூடாது என்று தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனால் மீன்வளம் மற்றும் பாரம்பரிய மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கு பாதிப்புகள் ஏற்படும் என்பதால் இந்த வலைகளை பயன்படுத்துவதற்கு மாற்றாக ஆழ்கடல் மீன்பிடிப்பிற்கு அரசு வழங்கும் உதவிகளை பெற்றுக்கொள்ளவும் கேட்டுக்கொண்டார்.
மேலும், மீனவர்கள் நீதிமன்றத் தீர்ப்புகளை அவமதிக்கும் வகையில் நடக்காமல், அரசுக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று மீனவர் அமைப்புக்கு அமைச்சர் ஜெயக்குமார் கோரிக்கை விடுத்தாதர்.
மீனவர்கள் அமைப்பு கோரிக்கை (Fishermen organization request)
இது குறித்து கருத்து தெரிவித்த மீனவ பிரதிநிதிகள், இவ்வலைகளின் பயன்பாட்டினை உடனடியாக தடை செய்தால், பெரிய அளவில் நட்டம் ஏற்படும் என்பதால் இந்த வலைகளை அனுமதிக்க வேண்டும் எனவும் இத்தொழிலில் இருந்து மாற்று மீன்பிடி தொழிலுக்கு மாறுவதற்கு மூன்று முதல் ஐந்தாண்டு கால அவகாசம் தேவை என்றும், படிப்படியாக மாற்றுத் தொழிலுக்கு மாறுவதாகவும் தெரிவித்தனர். அதுவரை சிறுதொழிலுக்கு பாதகம் ஏற்படாமல் ஆண்டிற்கு ஆறு மாதம் மட்டும் இவ்வலைகளைப் பயன்படுத்துவதற்கு அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
மீனவர்களுக்கான மாற்று திட்டங்கள் (Alternative Schemes for fishermen)
சுருக்குமடி பயன்படுத்தும் மீனவர்கள் இவற்றில் பொருத்தமான மாற்றுத் திட்டங்களை தேர்ந்தெடுத்து பயன்பெற அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
-
பிரதான் மந்திரி மட்சய சம்பத யோஜனா (PMMSY) திட்டத்தின் கீழ் ரூ.120 இலட்சம் மதிப்புள்ள ஆழ்கடல் மீன்பிடி படகுகள் ரூ.48 இலட்சம், 40 விழுக்காடு மானியத்துடன் கட்டி வழங்கும் திட்டம்.
-
மாநில அரசு திட்டத்தின் கீழ் ரூ.60 இலட்சம் மதிப்புள்ள ஆழ்கடல் மீன்பிடி படகுகள் ரூ.30 இலட்சம், 50 விழுக்காடு மானியத்தில் கட்டி வழங்கும் திட்டம்.
-
கண்ணாடி நாரிழைப்படகு, இயந்திரம், வலை மற்றும் ஐஸ்பெட்டிகள் ரூ.4.25 இலட்சம் மதிப்பீட்டில் ரூ.1.70 இலட்சம், 40 விழுக்காடு மானியத்துடன் வழங்கும் திட்டம்.
இவை தவிர, மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவுரையின்படி, சுருக்குமடி தொழிலில் ஈடுபட்டுள்ள நாட்டுப்படகுகளுக்கு அதிகபட்சமாக இரண்டு இலட்சம் மதிப்புள்ள வலையில் 40 விழுக்காடு மானியத்துடன் வழங்குவதற்கு புதிய திட்டம் செயல்படுத்த பரிசீலிக்கப்படும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் குறிப்பிட்டுள்ளார்.
சுகுக்குமடி வலைக்கு அனுமதி கோரி போராட்டம்
இந்நிலையில், நாகப்பட்டினம் மாவட்ட சீர்காழி அருகே திருமுல்லைவாசல் மீனவ கிராமத்தில், நாகப்பட்டினம் மாவட்டம், காரைக்கால் மாவட்டம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 21 மீனவ கிராமங்கள் சார்பில் சுருக்குமடி வலைக்கு ஆதரவாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சுருக்குமடி வலை பயன்படுத்த மறுப்பு தெரிவித்தால் வருகிற 17-ந் தேதி மீனவர்கள் குடும்பத்துடன் கடலில் இறங்கி தற்கொலை போராட்டம் நடத்துவது என 21 மீனவ கிராம கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
கேன்சர் கில்லர் என்று சொல்லப்படும் முள் சீத்தா பழம்! அதன் நன்மைகள் தெரியுமா உங்களுக்கு!
காளான்களை பதப்படுத்தும் மற்றும் விற்பனை முறைகள்!
கொரோனா நெருக்கடியால் 80% வருவாய் இழப்பு - சிறு-குறு, நடுத்தர நிறுவனங்கள் தவிப்பு!
Share your comments