தமிழகத்தில் கொரோனா நிலையை கருத்தில் கொண்டு இந்த ஆண்டு தீபாவளிக்கு அனைத்து ரேஷன் அட்டைதார்களுக்கும் ரூபாய் 2000 வழங்க தமிழக அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
ரேஷன் அட்டைதார்களுக்கு ரூபாய் 2000
தமிழகத்தில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் இலவச வேட்டி, சேலை, கரும்பு, பொங்கல் தொகுப்பு பொருட்களுடன், ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசையும் தமிழக அரசு வழங்கி வருகிறது.
இந்நிலையில், இந்த ஆண்டு கொரோனா பாதிப்பு காரணமாக பொதுமக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது மேலும் பலர் வேலை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனை கருத்தில் கொண்டு இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரூபாய் 2,000 ரொக்கப் பரிசு அளிக்க தமிழக அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜிஎஸ்டி பங்கில் இருந்து ரூ .3,000 கோடி
தீபாவளி பண்டிகையை மக்கள் சிறப்பாக கொண்டாடும் பொருட்டு இந்த ரொக்கப் பரிசை வழங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான மாநில ஜிஎஸ்டி பங்கில் இருந்து ரூ .3,000 கோடியை வழங்குமாறு மத்திய அரசிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை வைத்துள்ளதாகவும், அதற்கு மத்திய அரசும் சம்மதம் தெரிவித்துள்ளாகவும் கூறப்படுகிறது.
நவம்பர் மாதம் இந்த தொகையானது வழங்கப்படும் என்றும் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க...
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அரசு தயார் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி
PM Kisan திட்டத்தின் 7வது தவணை விரைவில்! விவசாயிகளே இன்றே விண்ணப்பித்திடுங்கள்!
விவசாயிகளிடம் இருந்து குறைந்தபட்ச ஆதரவு விலையில் 15,26,534 மெட்ரிக் டன்கள் நெல் கொள்முதல்!
Share your comments