மட்கும் குப்பைகளில் இருந்து தயாரிக்கப்படும் தமிழ்நாடு அரசின் செழிப்பு எனும் இயற்கை உரத்தை, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் நேற்று அறிமுகம் செய்து வைத்துள்ளார்.
செழிப்பு இயற்கை உரம்
தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து நகர்ப்புற உள்ளாட்சிகளிலும் நாள்தோறும் சுமார் 15,000 டன் குப்பை சேகரிக்கப்படுகிறது. இதில் 55% அளவிலான குப்பைகள் மட்கும் குப்பையாக உள்ளது. இவற்றை நேரடியாக அரசின் நுண்ணுயிர் உர ஆலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அங்கிருந்து மட்கும் குப்பைகளின் மூலம் இயற்கை உரம் தயாரிக்கப்படுகிறது.
இந்த உரங்கள் மண்ணின் காற்றோட்டம் மற்றும் நீரை தேக்கி வைத்துக் கொள்ளும் தன்மையை மேம்படுத்துவதோடு மட்டுமின்றி, இரசாயன உரத்திலிருந்து சத்துக்களை விடுவிக்கும் தன்மையை பயிர்கள் ஏற்றுக் கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
தரமான உரங்களின் மூலம் விளைவிக்கப்படும் பயிர்களானது உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் உள்ளது. தமிழ்நாடு அரசின் இந்த இயற்கை உரத்திற்கு செழிப்பு என்று பெயரிடப்பட்டு, இதற்கான அறிமுக விழாவை நடத்த திட்டமிடப்பட்டது.
அறிமுக விழாவில் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் “செழிப்பு” இயற்கை உரத்தை அறிமுகம் செய்து அதன் விற்பனையையும் தொடங்கி வைத்துள்ளார். இந்த செழிப்பு இயற்கை உரம் விவசாயிகளுக்கு குறைந்த விலையில் விற்கப்படும். இதனை விவரங்கள் பயன்படுத்திக் கொள்ளமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க
வீட்டில் இருந்து கொண்டே புதிய ரேசன் கார்டை வாங்கலாம்: எப்படித் தெரியுமா?
பழைய பென்சன் திட்டம் வேண்டும்: உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்தனர் தமிழக அரசு ஊழியர்கள்!
Share your comments