பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான திருப்புதல் தேர்வு திட்டமிட்டப்படி, ஜனவரி 19ம் முதல் நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்திருக்கிறது.
தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில் படிக்கும் சுமார் 20 லட்சம் மாணவ மாணவியர் பொதுத் தேர்வு எழுதி வருகின்றனர்.
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தமிழகத்தில் பரவிய கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் மூடப்பட்டதால், பொதுத் தேர்வுகளை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில் 2022 ம் கல்வி ஆண்டில் பொதுத் தேர்வு நடத்துவதற்கான அனைத்து பணிகளையும் பள்ளிக் கல்வித் துறை செய்து வருகிறது. இதற்கிடையே, ஒமிக்ரான் தொற்று தீவிரம் அடையத் தொடங்கியுள்ளதால், 10, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகள் தவிர மற்ற வகுப்புகளுக்கு ஜனவரி, 31 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக அனைத்து பள்ளிகளிலும் 10, பிளஸ் 1 , பிளஸ் 2 வகுப்புகளில் படித்து வரும் மாணவர்களின் நாமினல் ரோல் தயாரிக்கும் பணி தற்போது நடந்து வருவது குறிப்பிடதக்கது. பிளஸ் 2 மாணவர்களுக்கான நாமினல் ரோல் பட்டியல் தயாரிப்பு பணிகள் முடிந்துள்ளன. மேலும், ஒரு வாரத்துக்குள் பத்தாம் வகுப்பு நாமினல் ரோலும் தேர்வுத்துறைக்கு அனுப்பிவைக்கப்பட உள்ளது.
இந்நிலையில், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வுகள் நடத்த வேண்டும் என்று தேர்வுத் துறை கடந்த மாதம் அறிவித்து இருந்த நிலையில், அதற்கான பணிகள் நடந்து வருகிறது. இதற்கிடையே, பள்ளி மாணவர்கள் என்று இல்லாமல் பள்ளிக் கல்வி வளாகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் பலருக்கும் தொற்று பரவியுள்ளது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் தேர்வுப் பணிகள் பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கல்வித் துறையின் முனைப்பு ஆட்சரியமாக உள்ளது.
தொற்று சூழ் நிலை இருந்தாலும் திருப்புதல் தேர்வுகளை நடத்தியே தீர்வது என்று பள்ளிக் கல்வித்துறையும், தேர்வுத்துறையும் முனைப்புக் காட்டி வருகின்றன. இதனால் திட்டமிட்டப்படி 19 ம் தேதி முதல் திருப்புதல் தேர்வுகள் தொடங்கும். பத்தாம் வகுப்புக்கு காலையிலும், பிளஸ் 2 வகுப்புக்கு மதியமும் தேர்வு நடக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்நிலையில் பத்தாம் மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கும், ஆன்லைன் வகுப்பே சிறந்தது என உயர் நீதிமன்றம் கருத்தளித்திருப்பதும் குறிப்பிடதக்கது.
மேலும் படிக்க:
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு காய்கறி விலை சரிவு, வெல்லம், அரிசி விலை உயர்வு!
PM Kisan: 65 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் ரூ.2000 பெற வாய்ப்பு
Share your comments