அரசு போக்குவரத்துக் கழகங்களில் காலிப் பணிகள் வரும் நாட்களில் தேரிவுகளின் வாயிலாக நிரப்பப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறை அமைச்சர் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அது என்ன தேர்வு, எப்போது தேர்வு என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.
அரசு போக்குவரத்துக் கழகங்களில் நடத்துநர், ஓட்டுநர் முதலான பல்வேறு காலிப் பணியிடங்கள் இருக்கின்றன. பொதுவாக இப்பணியிடங்களுக்கு நேரடி முறையில் ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். ஆனால் இனி நேரடி ஆட்சேர்ப்பு நடைபெறாது எனத் தகவல் வெளியாகியுள்ளது.
அரசு போக்குவரத்துக் கழகங்களில் நேரடியாக ஆட்சேர்ப்பு நடைபெறும் போது ஏராளமான் முறைகேடுகள் நடைபெறுவதாகத் தகவல் வெளிவந்த வண்ணம் உள்ளன. இத்தகைய முறைகேடுகளைத் தடுக்கும் வகையில் தான் இந்த தேர்வு முறையில் ஆட்சேர்ப்பு நடைபெற உள்ளது என அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அரசு போக்குவரத்துக் கழகங்களில் உள்ள காலிப் பணிகளுக்கு இனி வரும் நாட்களின் டி.என்.பி.எஸ்.சி (TNPSC) தேர்வு வாயிலாக ஆட்சேர்ப்பு நடைபெறும் எனத் தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் திருவான்மியூர், அடையாறு உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு செய்த போது, தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு மேல் விடுப்பு எடுத்துப் பணிக்கு வராத ஊழியர்களிடம் கலந்து பேசினார். நீண்ட நாள் பணிக்கு வராத ஊழியர்களிடம் நடவடிக்கை எடுப்பதே அரசின் வழக்கம். ஆனால், இதை உங்களுக்குத் தரும் ஒரு கனிவாகப் பாருங்கள், இனி விடுப்பு எடுப்பதை விடுத்து மக்களுக்காகச் செயல்படத் தொடங்குங்கள் என வலியுறுத்தியுள்ளார்.
அப்போது, கட்டணம் இல்லாமல் பயணம் செய்யும் பெண்களிடம் கனிவாக நடந்துகொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தினார். மேலும் அவர் பேசுகையில் இந்த தேர்வு முறையினையும் அறிவித்துள்ளார். எனவே, இந்த தேர்வு முறைமை எப்படி நடைபெறும், எவ்வாறு பணிகள் நிரப்பப்படும் முதலான செய்திகள் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க
Share your comments