1. செய்திகள்

தமிழகத்தில் இனி சரக்குப் போக்குவரத்துக்கு இடையூறு இல்லை!

Poonguzhali R
Poonguzhali R
Freight Hassle-Free in Tamil Nadu!

போக்குவரத்து, சாலைப் போக்குவரத்து மற்றும் சரக்கு போக்குவரத்தை திட்டங்களை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை தொடங்கி வைத்தார். செங்கல்பட்டு மற்றும் தாம்பரம் இடையே புதிய 30 கிமீ அளவிலான மூன்றாவது பாதைவழி, எழும்பூர் ரயில் நிலையத்தை ரூ 370 கோடியில் மறுவடிவமைப்புச் செய்தல் மற்றும் காட்பாடி ரயில் நிலையம் ஆகியவை இதில் அடங்கும். மற்ற திட்டங்கள் என்று பார்க்கும்பொழுது, சென்னைத் துறைமுகம்-மதுரவாயல் உயர்த்தப்பட்ட தாழ்வாரம், சென்னை-பெங்களூரு விரைவுச் சாலை மற்றும் சென்னையில் உள்ள மல்டி மாடல் லாஜிஸ்டிக் பார்க் ஆகியன அடங்கும்.

புதிய இரயில் பாதையானது ரயில்வேக்கு அதிகப் புறநகர் ரயில்களை இயக்க அனுமதிக்கும். அதோடு, எக்ஸ்பிரஸ் ரயில்கள், சிக்னல்களுக்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியதில்லை. தற்போது தாம்பரம் - செங்கல்பட்டு இடையே கூடுதல் சேவையை ரயில்வே தொடங்க உள்ளது. பீக்ஹவர் இல்லாத நேரங்களில் அதிர்வெண்ணை அதிகரிக்க இது திட்டமிட்டுள்ளது. எனவே, பீக்ஹவர்ஸில் இரயிலில் தொங்கிக் கொண்டு பயணம் செய்தால் பெரும் விளைவைச் சந்திக்க நேரிடும் எனக் கூறப்படுகிறது.

காஞ்சிபுரம் மற்றும் அரக்கோணத்தை இணைக்கும் வகையில் சுற்றுவட்ட சேவையை இயக்க ரயில்வே முயற்சிக்க வேண்டும் என பயணிகள் கேட்டுக் கொண்டு இருக்கின்றனர். சென்னை துறைமுகம்-மதுரவாயல் உயர்த்தப்பட்ட தாழ்வாரம் முதன்முதலில் 2007 இல் திறக்கப்பட்டது. ஆனால் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு பணிகள் நிறுத்தப்பட்டன. இன்று திட்டப் பணிகள் நிறைவேற்றப்பட்டுக் கொண்டு இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

5,800 கோடி மதிப்பிலான இந்த வழித்தடப் பணிகள் 30 மாதங்களுக்குள் முடிக்கப்பட உள்ளது. சென்னை துறைமுகத்திற்கு சரக்குகளைத் தாமதமின்றி எடுத்துச் செல்ல, இரண்டு தளங்களில் ஒன்று, டிரக்குகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. டிஎன் லாரி உரிமையாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த எஸ் யுவராஜ் கூறுகையில், இந்தத் திட்டம் ஸ்ரீபெரும்புதூர் வரை நீட்டிக்கப்படும் என லாரி ஓட்டுநர்கள் எதிர்பார்த்துள்ளனர். மதுரவாயலில் நிறுத்தினால், பூந்தமல்லி பகுதியில் அடிக்கடி நெரிசல் ஏற்படும், என்றார். ரூ.6,400 கோடி மதிப்பிலான சென்னை-பெங்களூரு விரைவுச் சாலைத் திட்டம், 278 கி.மீ நீளமுள்ள நான்கு வழிச் சாலை வழியாக இரு பெருநகரங்களையும் இணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

தற்போது, ​​சென்னையில் இருந்து பெரும்பாலான வாகனங்கள் NH-48 மற்றும் NH-44 (வேலூர்-கிருஷ்ணகிரி-ஓசூர்) வழியாக செல்கின்றன.
பெங்களூரு அடைய. 350 கி.மீ பயணிக்க குறைந்தது ஆறரை மணி நேரம் ஆகும். விரைவுச் சாலை முடிந்தவுடன், பயண நேரம் இரண்டு மணி நேரம் வரை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த திட்டத்தின் முக்கிய அம்சம் மேம்பட்ட போக்குவரத்து மேலாண்மை அமைப்பு (ADMS) ஆகும். முன்மொழியப்பட்ட டோல் பிளாசாக்களுக்கு அருகில் வைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் போர்டுகளின் மூலம் சாலைப் பயனர்களுக்கு ட்ராஃபிக் அளவு குறித்த நிகழ்நேரத் தகவலை வழங்குவதன் மூலம் தடையற்ற போக்குவரத்து ஓட்டத்தை எளிதாக்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. லாஜிஸ்டிக்ஸ் பார்க் என்பது சரக்குக் கையாளும் வசதி, பல்வேறு போக்குவரத்து அணுகல் (ரயில் மற்றும் சாலை) மற்றும் இயந்திரமயமாக்கப்பட்ட கிடங்குகள் என்றும் பொருள் படும். இது சரக்கு செலவுகள், சரக்குகளைக் கொண்டு செல்ல எடுக்கும் நேரம், கிடங்கு செலவு மற்றும் நெரிசலைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

மேலும் படிக்க

பசுமை குழு: திருச்சியைப் பசுமை திருச்சியாக மாற்ற முடிவு

மாதம் ரூ. 30,000 லாபம் தரும் காடை வளர்ப்பு

English Summary: Tamilnadu updates: Freight Hassle-Free in Tamil Nadu! Published on: 27 May 2022, 03:22 IST

Like this article?

Hey! I am Poonguzhali R. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.