ஆப்பிள் செல்போனுக்கான உதிரி பாகங்களை உற்பத்தி செய்யத் தமிழ்நாட்டில் டாடா நிறுவனம் சுமார் 5,000 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளது. இது குறித்த விரிவான தகவலை இப்பதிவில் பார்க்கலாம்.
டாடா ஸ்டீல் நிறுவனமானது உலகளவில் மிகப்பெரிய நிறுவனம் எனச் சொல்லப்படுகின்றது. இதன் கெப்பாசிட்டி 27.5 மில்லியன் டன் ஆகும். சுமார் 26 நாடுகளுக்கும் மேலாக நிறுவனங்களை அமைத்துள்ளனர்.
டாடா இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட் மூலம் இந்தியாவினுடைய மிகப் பெரிய பவர் ப்ரொடியூஸிங் டாடா பவர் மூலம் செயல்பட்டு வருகின்றது. டாடா கன்ஸல்டிங்க் இஞ்சினியர்ஸ் லிமிடெட் என்ற பெயரில் டிசைன் நிறுவந்த்தை வைத்து பல நிறுவனங்களுக்கு டிசைன்கள் செய்யப்படுகின்றன.
டாடா நிறூவனம் முதன்முதலில் டெல்கோ என்ற பெயரில் இருந்தது. சிறிது காலத்திற்குப் பின்பு டாடா மோட்டார்ஸ் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ் என்ற இந்த நிறுவனம் சுமார் 46 நாடுகளில் 285 நிறுவனங்களை அமைத்துள்ளன.
அதோடு, இந்த நிறுவனத்தின் மூலம் வீட்டிற்கு தேவையான சமையல் பொருட்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. டாடா உப்பு, டாடா மசாலா, டாடா எண்ணெய், டாடா பருப்பு, டாடா வாட்டர் முதலான வகை பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.
இத்தகைய டாடா நிறுவனமானது, டாடா எலெக்ட்ரானிக்ஸ் எனும் செல்போன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையினை ஓசூரில் தொடங்கியுள்ளது. இந்த நிலையில், டாடா நிறுவனம் தொடங்கியுள்ள தொழிற்சாலைக்கு 500 ஏக்கர் நிலம் வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க
PMEGP: புதிய தொழில் தொடங்க 17.50 லட்சம் கடன் அரசு அறிவிப்பு!
Share your comments