பொதுவாக, பயிர் விளைச்சல் மற்றும் உற்பத்தித்திறன் மண்ணின் ஆரோக்கியத்தைப் பொறுத்தது. இருப்பினும், மோசமான நில நடைமுறைகள், மேலாண்மை, காலநிலை மாற்றம் ஆகியவற்றால் ஆரோக்கியமான மண் மோசமடைகிறது.
விவசாயிகள் முதன்மையாக மண்ணின் ஆரோக்கியத்தைச் சோதிக்க இரசாயன அடிப்படையிலான பகுப்பாய்வு நுட்பங்களை நம்பியுள்ளனர். இதில் மண் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வகத்தில் பகுப்பாய்வு செய்யப்படுகின்றன. இருப்பினும், வரையறுக்கப்பட்ட சோதனை வசதிகள், விவசாயிகளின் விழிப்புணர்வு இல்லாமை, அதிக தளவாட மற்றும் செயல்பாட்டு செலவுகள் ஆகியவை சோதனையைக் கடினமாக்குகின்றன. இந்நிலையில், Google மற்றும் nurture.farm ஆகியவை நாடு முழுவதும் நிலையான விவசாய நடைமுறைகளை பின்பற்றுவதை விரைவுபடுத்த உதவும் சில ஆராய்ச்சி திட்டங்களை முன்மொழிந்துள்ளன.
இது விவசாயிகளுக்கு விரைவாகவும், மலிவாகவும் மண்ணின் ஆரோக்கிய அளவீட்டு நுட்பங்களை வழங்கும். மேலும் பல பருவங்களில் பயிர், விதை மற்றும் ஊட்டச்சத்துத் தேர்வுகளை மேம்படுத்தும் வகையிலும் அமைய இருக்கிறது. இது கூகுளின் AI மற்றும் இமேஜிங் தொழில்நுட்பங்கள், கிளவுட், மேம்பட்ட புவியியல் பகுப்பாய்வு மற்றும் இயந்திரக் கற்றல் நிபுணத்துவம் ஆகியவற்றைப் பயன்படுத்துகிறது.
"nurture.farm இல் உள்ள ”எங்கள் குறிக்கோள்” என்பது, இந்தியாவில் உள்ள சிறு விவசாயிகளை மையமாகக் கொண்டு அமைக்கப்பட்டதோடு, முடிவெடுப்பதை எளிதாக்குவதற்கும் விளைவுகளை மேம்படுத்துவதற்கும் விவசாயிகளுக்கு மேம்பட்ட மற்றும் புதுமையான தொழில்நுட்பம் சார்ந்த தீர்வுகளைக் கொண்டுவருவதற்கும் பயனளிக்கிறது.
இந்தியாவின் விவசாய நடைமுறைகளின் நிலப்பரப்பைப் பிரதிபலிக்கும் பல்வேறு மண் வகைகள் மற்றும் பண்புகளில் மண்ணின் கரிம கார்பன் (SOC) மற்றும் மண்ணில் உள்ள பிற ஊட்டச்சத்துக்களைத் துல்லியமாக அளவிடுவதற்கு தொலைநிலை உணர்திறன் மற்றும் தரவு சேகரிப்பு முறைகளுடன் இணைந்து ஹைப்பர் ஸ்பெக்ட்ரல் பட பகுப்பாய்வுகளைப் பயன்படுத்துவதிலும் இந்த குழு கவனம் செலுத்த இருக்கிறது.
இந்த மண் பரிசோதனை அணுகுமுறை, இந்தியா முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு குறைந்த விலையில் சேவைகளை வழங்கவும், மண்ணின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் பயன்படும். மேலும், தகுந்த பயிர்களை எடுக்கவும், உள்ளீடு பொருட்களையும், செயல்பாட்டு நடைமுறைகளையும் கொண்டு, மேம்பட்ட விளைச்சலையும் வருவாயையும் பெற உதவும் வகையில் செயல்பட இருக்கிறது.
மேலும் படிக்க
100% புதுப்பிக்கத்தக்க ஆற்றலுடன் ஃபெர்டிகுளோபல் டிரான்ஸ்ஃபார்மிங் உர உற்பத்தி
இயற்கை வேளாண்மை பற்றிய முப்பது நாள் சான்றிதழ் பயிற்சி: அரசு அறிவிப்பு!
Share your comments