1. செய்திகள்

TET/TRB: தற்கால ஆசிரியர் நியமனம்: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

Poonguzhali R
Poonguzhali R
TET/TRB: Temporary Teacher Recruitment

தற்காலிக ஆசிரியர் நியமனம் தொடர்பாகப் பள்ளிக்கல்வித்துறை திருத்திய வழிக்காட்டு நெறிமுறைகள் உள்ளடக்கிய அறிவிப்பை வெளியிட்டது. அதோடு, தற்காலிக ஆசிரியர் பணிக்கு இன்று ஜுலை 4-ஆம் தேதி முதல் வரும் ஜுலை 6 ஆம் தேதி மாலை 5 வரை விண்ணப்பிக்கலாம் எனப் பள்ளிக்கல்வித் துறை ஆணையர் தெரிவித்திருக்கிறார். அது குறித்த விரிவான தகவல்களை இப்பதிவு விளக்குகிறது.

மேலும் படிக்க: பணிபுரியும் பெண்களுக்கு விடுதிகள்! மத்திய அரசின் புதிய திட்டம்!!

 

அரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள 1331 பணியிடங்களைத் தற்காலிக அடிப்படையில் பள்ளி மேலாண்மை குழுக்களே நியமனம் செய்யலாம் எனப் பள்ளிக் கல்வித்துறை அனுமதி அளித்திருந்தது. இந்த உத்தரவு ரத்து செய்ய வேண்டும் என ஆசிரியர் சங்கங்கள் சார்பில் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், தற்காலிக ஆசிரியர் நியமனத்திற்கு இடைக்கால தடை விதித்தது நினைவுக்கூறத்தக்கது.

மேலும் படிக்க: புது அப்டேட்: விரைவில் 6 லட்சம் மாணவர்களுக்கு இலவச சைக்கிள்கள்!

இந்நிலையில் தற்போது தற்காலிக ஆசிரியர் நியமனம் தொடர்பாகப் பள்ளிக்கல்வித்துறை திருத்திய வழிக்காட்டு நெறிமுறைகளை வெளியிட்டது. அதன்படி, வழிகாட்டு நெறிமுறைகள் வருமாறு,

  • ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கே முன்னுரிமை கொடுத்துத் தற்காலிக ஆசிரியர்களாக நியமிக்கலாம்.
  • இல்லம் தேடி கல்வித்திட்டத்தில் தன்னார்வலர்களாக பணிபுரியவர்களை ஆசிரியர்களாக நியமிக்கலாம்.
  • முதுகலைபட்டதாரி ஆசிரியர் பணிக்கான TRB சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்றவர்களையும் நியமிக்கலாம்.
  • பள்ளிக்கு அருகே மாவட்டத்திற்கு வசிக்கும் நபர்களுக்கு முன்னரிமை அளித்து ஆசிரியர்களாக நியமிக்கலாம்.
  • திறமை அடிப்படையில் மட்டுமே தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.

மேலும் படிக்க: 7th Pay Commission: அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு! பெரிய ஏற்றம்!!

வரைமுறை எனப் பார்க்கும்போதுஇ கீழ்வருவன அமைகின்றன.

  • இடைநிலை ஆசிரியர் பதவிக்கு TET தேர்வு தாள் 1 ஒன்றில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.
  • பட்டதாரி ஆசிரியர் பதவிக்கு TET தேர்வு தாள் 2 -வில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.
  • முதுநிலை ஆசிரியர் பதவிக்கு 2020ல் வெளியான அரசாணையின் படி தகுதி பெற்றிருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: TNEB: இலவச விவசாய மின் இணைப்புக்கு இன்றே விண்ணப்பியுங்கள்? விவரம் உள்ளே!

இந்த நிலையில் தற்காலிக ஆசிரியர் பணிக்கு இன்று ஜுலை 4-ஆம் தேதி முதல் ஜுலை 6 ஆம் தேதி மாலை 5 வரை விண்ணப்பிக்கலாம் எனப் பள்ளிக்கல்வித் துறை ஆணையர் தெரிவித்திருக்கிறார். அதோடு, தற்காலிகமாக நியமிக்கப்படும் ஆசிரியர்களின் பணி திருப்தி அளிக்காவிடில் அவர்கள் உடனே பணியிலிருந்து நீக்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: TNPSC: டிஎன்பிஎஸ்சி தேர்வில் தமிழ்வழி இடஒதுக்கீடு சர்ச்சை!

தற்காலிக ஆசிரியர் பணிநியமனத்திற்குத் தேர்வுக்கான விண்ணப்பத்தாரர்களை வகுப்பறையில் பாடம் நடத்த வைத்து அவர்களது திறனைப் பரிசோதிக்க வேண்டும் எனவும் பள்ளிக் கல்வி ஆணையர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க

தங்கம் மீதான இறக்குமதி வரி அதிகரிப்பு! தங்கம் விலை அதிகரிக்குமா?

தற்காலிக ஆசிரியர் நியமனத்திற்குத் தடை: அதிரடி உத்தரவு!

English Summary: TET/TRB: Temporary Teacher Recruitment: Apply Today! Published on: 04 July 2022, 11:18 IST

Like this article?

Hey! I am Poonguzhali R. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.