1. செய்திகள்

ஏற்காட்டில் 46-வது மலர் கண்காட்சி கோலகாலமாக தொடங்கியது!

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan
The 46-th Flower exhibition has started in Yercaud

சேலம் மாவட்டம், ஏற்காட்டில் 46-வது கோடை விழா மற்றும் மலர் கண்காட்சியினை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, மற்றும் வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் இணைந்து நேற்று தொடங்கி வைத்தனர்.

மேலும், இவ்விழாவில் 161 பயனாளிகளுக்கு ரூ.1.39 கோடி மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளையும் அமைச்சர் பெருமக்கள் வழங்கினார்கள்.

கண்காட்சியின் சிறப்பம்சம் என்ன?

இக்கோடை விழாவில் குழந்தைகள், சுற்றுலாப் பயணிகள் என அனைத்துத் தரப்பினரையும் கவரும் வகையில் தோட்டக்கலைத்துறையின் சார்பில் அண்ணா பூங்காவில் பொன்னியின் செல்வன் கப்பல் வடிவம், டிரேகன் வாரியர், சோட்டா பீம், ஹனி பீம் உள்ளிட்ட பல்வேறு வடிவமைப்புகள் கார்னேஷன், ஜெர்பரா, ஆர்க்கிட் உள்ளிட்ட 5 இலட்சம் அரிய வகை வண்ண மலர்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும் பார்வையாளர்களின் கண்களைக் கவரும் வகையில் டாலியா, மேரி கோல்ட், சால்வியா உள்ளிட்ட பல்வேறு உள்ளூர் மலர்களைக் கொண்ட பத்தாயிரம் மலர் தொட்டிகள் இம்மலர்க்கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

முன்னதாக, தமிழ்நாடு அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை விளக்கும் வகையில் செய்தி மக்கள் தொடர்புத் துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை, சுற்றுலாத் துறை, உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை அமைச்சர் பெருமக்கள் திறந்து வைத்துப் பார்வையிட்டனர்.

இவ்விழாவில் அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது:

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மலைவாழ் மக்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை அறிவித்துச் சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறார்கள்.

குறிப்பாக, பாலமலை பகுதி மலைவாழ் மக்களின் 100 ஆண்டுகால கனவாக சாலை வசதி இருந்து வந்ததை அறிந்து, ரூ.31.53 கோடி மதிப்பீட்டில் தார் சாலையாக தரம் உயர்த்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதேபோல், கருமந்துறையில் உள்ள 2,000 குடும்பங்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், ஏற்காட்டில் ரூ.11 கோடி செலவில் 3 கிணறுகள் வெட்டப்பட்டு தற்போது பொதுமக்களின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது.

வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறியதாவது:

ஏற்காட்டில் 46-வது கோடை விழா மற்றும் மலர்க்கண்காட்சி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. முன் எப்பொழுதும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு நடைபெறும் ஏற்காடு மலர்க்கண்காட்சி வண்ண மலர்களைக் கொண்டும், மின் விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டதால், ஏற்காடு ஊட்டியைப் போல் காட்சியளிக்கிறது என்றார்.

மேலும், சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக நாள்தோறும் சேலம், புதிய பேருந்து நிலையத்தில் இருந்து ஏற்காட்டிற்கு சுற்றுலாத்துறையின் ஏற்பாட்டில் தனியார் நிறுவனம் சார்பில் ஏற்காடு சூழலியல் சுற்றுலா பேருந்துகளை ஏற்காட்டில் அமைச்சர் பெருமக்களால் தொடங்கி வைக்கப்பட்டது.

46-வது கோடை விழா மற்றும் மலர்க்கண்காட்சி வருகிற 28.05.2023 வரை நடைபெறவுள்ளது. இக்கோடை விழா நடைபெறும் அனைத்து நாட்களிலும் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் மாவட்ட நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

pic courtesy: KN nehru (FB)

மேலும் காண்க:

ஆவின் தண்ணீர் பாட்டில்- கைக்கொடுக்குமா தமிழக அரசுக்கு?

English Summary: The 46th Flower exhibition has started in Yercaud Published on: 22 May 2023, 11:08 IST

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.