1. செய்திகள்

தொடங்கப் போகுது மலர் கண்காட்சி! ஜூன் 3-இல் தொடக்கம்!!

Poonguzhali R
Poonguzhali R
The flower fair is about to begin! Starting June 3rd!!

ஜூன் 3 ஆம் தேதி முதல் 5-ம் தேதி வரை செம்மொழி பூங்காவில் மலர் கண்காட்சி நடைபெறும் எனத் தமிழகத் தோட்டக்கலைத்துறை அறிவித்து இருக்கிறது. தமிழகத்தில் கோடை காலம் தொடங்கி விட்டது என்றாலே ஊட்டி, ஏற்காடு, திண்டுக்கல் உட்பட பல இடங்களில் மலர் கண்காட்சிகள், கோடை விழாக்கள் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் சென்னையிலும் தொடர இருக்கிறது.

அந்த வகையில், தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாளினையொட்டி சென்னையில் செம்மொழி பூங்காவில் வருகின்ற ஜூன் மாதம் 3ஆம் நாள் முதல் 5-ம் தேதி வரை மலர் கண்காட்சி நடத்தப்படும் என்று தோட்டக்கலைத்துறை அறிவித்து இருக்கிறது. பெங்களூரு, உதகை மற்றும் ஓசூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 200-க்கும் மேற்பட்ட மலர் வகைகளை கொண்டு கண்காட்சி நடத்தப்பட இருக்கிறது.

மலர் கண்காட்சியினைப் பொதுமக்கள் காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை பார்வையிடலாம் எனத் தோட்டக்கலைத்துறை அறிவித்து இருக்கிறது. தமிழக மாணவர்கள் மற்றும் சிறியவர்களுக்கு என ரூபாய் 20 கட்டணமாகவும், பெரியவர்களுக்கு ரூபாய் 50 நுழைவு கட்டணமாகவும் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

முதல் நிலையாக, செம்மொழி பூங்காவில், கடந்த 2022 ஆண்டு, ஜூன் மாதம் மலர் கண்காட்சி நடத்தப்பட்டது. இதற்கு பெருமளவில் வரவேற்பு கிடைததிருந்தது. இதனையடுத்து, இரண்டாவது மலர் கண்காட்சி, ஜூன் 3 முதல் 5ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. குறிப்பாகச் செம்மொழி பூங்காவில், அரியவகை மரங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

தாவரவியல் பயிலும் மாணவர்களுக்களுக்கு உதவியாக இருக்கிறது. கோடை காலத்தில், அரியவகை மலர்களைப் பயன்படுத்தி, மலர் கண்காட்சி நடத்தப்படுகின்றது என்பது வழக்கம். இவை, நீலகிரி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து எடுத்துவரப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மலர் கண்காட்சியினைக் காண வரும் குழந்தைகள் பொழுதை கழிக்கவும், பல்வேறு வசதிகள் செய்யப்பட இருக்கின்றனன.

மேலும் படிக்க

முல்லைப் பெரியாறு அணை: தமிழகப் பாசனத்திற்காக நீர் திறப்பு!

விரைவில் வரப்போகிறது திருச்சிக்கு மெட்ரோ ரயில்!

English Summary: The flower fair is about to begin! Starting June 3rd!! Published on: 01 June 2023, 01:55 IST

Like this article?

Hey! I am Poonguzhali R. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.