கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும் கூட்டுறவு சங்கங்கள், பல்வேறு வணிகப் பெயரில் மஞ்சள் மசாலா பொருட்கள், மாவு வகைகள், மிளகு, உரம், தேன், சமையல் எண்ணெய் ஆகியனவற்றை விற்பனை செய்கின்றன. அவை தரமாக இருப்பதுடன், வெளிச்சந்தையுடன் ஒப்பிடும்பொழுது விலை குறைவான அளவும் இருக்கின்றன.
மேலும் படிக்க: PM Kisan ரூ.2000! வெளியான புதிய அப்டேட்!
கூட்டுறவு தயாரிப்புகள், குறிப்பிட்ட மாவட்டங்களில் மட்டுமே கிடைக்கின்றன. ஆகவே, அனைத்து மாவட்டங்களிலும் பொருட்களைச் சந்தைப்படுத்தவும், விற்பனை செய்யவும், 'கோ பஜார்' என்ற பெயரில் மொபைல் போன் செயலி அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதற்கான செலவு, 20 லட்சம் ரூபாய் எனக் கூறப்படுகிறது.
புதிதாக வெளியாக இருக்கும் கூட்டுறவு தயாரிப்புகள், அளவு, விலை உள்ளிட்ட விபரங்கள் இடம்பெற்றிருக்கும். வாடிக்கையாளர்கள் மொபைல் செயலியில், 'ஆர்டர்' கொடுத்தால், வீடுகளுக்கு, 'டெலிவரி' செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க: காய்கறி பயிரிட மானியம்|புகையிலைக்கு மாற்றாக காய்கறி|ஏக்கருக்கு 8000 ரூபாய்!
சங்கம் மற்றும் வணிக பெயர் பட்டியல் வருமாறு:
- சேலம் வேளாண் கூட்டுறவு சங்கம்: அமிர்தம்
- ஈரோடு வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கம்: மங்களம்
- சைதாப்பேட்டை சங்கம்: மருதம்
- பெருந்துறை வேளாண் சங்கம்: பசுமை
- திருச்செங்கோடு வேளாண் கூட்டுறவு சங்கம்: அர்த்தநாரீஸ்வரா
- காஞ்சி கூட்டுறவு பண்டகசாலை: காஞ்சி
மேலும் படிக்க
மெக்கானிக் வேலை செய்வோர்களுக்கு அறிய வாய்ப்பு: Uzhavan App வரப்போகும் புதிய வசதி
பத்திரிக்கையாளர் பென்சன் ரூ.12000 ஆக உயர்வு|ரூ.1,58,88,000 நிதி|அரசு ஆணை வெளியீடு!
Share your comments