உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு வழங்கப்படும் ரூ.5 லட்சம் மூலதன நிதியில் இருந்து தேவையான வேளாண் கருவிகளை வாங்கி விவசாயிகள் பயன் பெறலாம் என திருவாரூர் மாவட்ட வேளாண்துறை தெரிவித்துள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் கூட்டு பண்ணைய திட்டத்தின் கீழ் விவசாயிகள் மற்றும் விற்பனையாளர்கள் இடையேயான வேளாண் கருவிகள் வாங்குவது தொடர்பாக ஆலோசனைக்கூடம் நடைபெற்றது. வேளாண் இணை இயக்குனர் அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில், இணை இயக்குனர் சிவக்குமார் கலந்துகொண்டு பேசினார், அப்போது, இத்திட்டத்தின் நோக்கம் குறித்து விவரித்தார்.
உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு தலா ரூ.5 லட்சம்
கூட்டு பண்ணைய திட்டத்தின் கீழ் வேளாண்மைத்துறையின் மூலம் 30 உழவர் உற்பத்தியாளர் குழுக்களும், தோட்டக்கலைத்துறை மூலம் 4 உழவர் உற்பத்தியாளர் குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இக்குழுக்களை ஊக்குவிக்கும் பொருட்டு தமிழக அரசு ஒவ்வொரு குழுவிற்கும் தலா ரூ.5 லட்சம் மூலதன நிதியாக வழங்குகிறது. அதன் மூலமாக பயிர் சாகுபடிக்கு தேவையான வேளாண் கருவிகளை வாங்கி பயன்பெறலாம் என்றார்.
பண்ணை கருவிகள் கண்காட்சி
கூட்டத்தைதொர்ந்து, வேளாண் பண்ணைக்கருவிகள் விற்பனையாளர்கள் சார்பில் எந்திர உழுவை, சமன்படுத்தும் கருவி, எந்திர தெளிப்பான், எந்திர களை எடுக்கும் கருவி, நடவு எந்திரம், சிறிய கதிர் அறுவடை எந்திரம் போன்ற பல்வேறு வேளாண் கருவிகளின் கண்காட்சி நடைபெற்றது.
மேலும் படிக்க..
பேரிடர் நிவாரண நிதி - தமிழகத்திற்கு ரூ.286.91 கோடி வழங்க மத்திய அரசு அனுமதி!
‘இனிப்பு புரட்சி’-யில் இலக்கை எட்டவிருக்கும் தேசிய தேனீவளர்ப்பு & தேன் இயக்கம்!!
வீட்டுத் தோட்டம் அமைக்க சொட்டு நீர் உபகரணங்களுக்கு மானியம்! அனைவருக்கும் அழைப்பு!!
Share your comments