ஆவின் தண்ணீர் பாட்டில் விநியோகிக்கப்பட இருப்பதாகப் பால்வளத்துறை அமைச்சர் நாசர் சென்னை தலைமை செயலகத்தில் தெரிவித்து இருக்கிறார். இது குறித்த விரிவான தகவலை இப்பதிவில் காணலாம்.
கடந்த ஆட்சி காலத்தில் அரசு போக்குவரத்துக் கழகம் வாயிலாக குடிநீர் பாட்டில் ரூ. 10 எனும் விலையில் விற்கப்பட்டது. ஆனால் அது பிறகு கைவிடப்பட்டது. இந்த திட்டத்தைத் தொடர்ந்து ஆவினில் தண்ணீர் பாட்டில் வர இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பால்வளத்துறை அமைச்சர் நாசர் கூறியதாவது, தமிழகத்தில் 28 இடங்களில் ஆவின் பால் தயாரிக்கக் கூடிய யூனிட் உள்ளது. அங்கு வாட்டர் பிளாண்ட் இருப்பதால் குடிநீர் பாட்டில் தயாரிக்கும் திட்டம் பரிசீலனஈயில் இருப்பதாகவும், அது தற்போது வாட்டர் பாட்டில் மற்றும் லேபிள் போன்ற வடிவமைப்புகளை இறுதி செய்யும் பணி நடைபெற்று வருகின்றது எனவும் கூறியுள்ளார்.
மேலும், ஒரு லிட்டர், அரை லிட்டர் அளவு உடையதாகக் குடிநீர் பாட்டில் தயாரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறியிருக்கிறார். அதோடு, ஆவின் பால் பாக்கெட்டுகளில் அரசு விளம்பரங்கள் வருகின்ற நிலையில் சினிமா படங்களின் விளம்பரங்களையும் வெளியிடுவது குறித்துப் பரிசீலனை செய்து வருவதாகவு தகவல் தெரிவித்து இருக்கிறார்.
இறுதியாக ஆவின் பால் விற்பனை குறித்துப் பேசிய அவர், கடந்த ஆட்சியில் ரூ 26 லட்சமாக இருந்த ஆவின் பால் விலை தற்போது ரூ.28 லட்சமாக உயர்ந்துள்ளது எனக் கூறியுள்ளார்.
மேலும் படிக்க
Share your comments