தமிழகத்தில் அநேக இடங்களிலும், காரைக்காலிலும் மழை பெய்துள்ளது. புதுவையில் மிக லேசான மழை பதிவாகியுள்ளது. அந்த வகையில் மஞ்சள், ஆரஞ்சு மற்றும் பச்சை அலர்ட் என பல தமிழக மாவட்டங்களுக்கு மழைக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மஞ்சள் அலர்ட்
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதப்புரம் மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் வழங்கப்பட்டுள்ளது. இம்மாவட்டங்களில், அதிகபட்சமாக காற்றின் வேகம் மணிக்கு 40கிமீ-க்கும் குறைவான லேசான இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பச்சை அலர்ட்
காஞ்சிப்புரம், திருப்பத்தூர், சேலம், ஈரோடு, கோயம்புத்தூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, தேனி, நீலகிரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், கரூர், விருதுநகர் மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களுக்கு பச்சை அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. மழை அறிவிப்பு இல்லை, எனவே, இம் மாவட்டங்களுக்கு பச்சை ஆலர்ட் வழங்கப்பட்டுள்ளது.
நாளை: (19-நவம்பர்-2022) வானிலை அறிவிப்பு..
நாளை: (19-நவம்பர்-2022)
தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.
நாளை (19-நவம்பர்-2022) மீனவர்களுக்கான எச்சரிக்கை:
இன்று தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நாளை 16.11.2022 தென்கிழக்கு வங்ககடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள அந்தமான் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும், இது மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் 18ஆம் தேதி வாக்கில் வலுப்பெறக்கூடும்.
மேலும் தெற்கு அந்தமான் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்ககடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். எனவே, மீனவர்கள் இப்பகுதிக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மேலும் படிக்க:
மலர்கள் சாகுபடி ரூ.60,000 வரை மானியம்
PM Kisan திட்டம் பயன்பெற e-kyc புதுப்பிக்க காலக்கெடு தேதி அறிவிப்பு!
Share your comments