1. செய்திகள்

TNAU: பேக்கரி மற்றும் மிட்டாய் பொருட்கள் தயாரிப்பு குறித்த பயிற்சி

Deiva Bindhiya
Deiva Bindhiya
TNAU: Training in Bakery and Confectionery Production

"பேக்கரி மற்றும் மிட்டாய் பொருட்கள் தயாரித்தல்" என்ற தலைப்பில் இரண்டு நாள் பயிற்சியை நாளை, 13 அக்டோபர் 2022 மற்றும் 14 அக்டோபர் 2022 அன்று கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் (TNAU) வழங்கவுள்ளது. தற்போது,

பேக்கரி பொருட்கள் அவற்றின் வசதி, வகை, கிடைக்கும் தன்மை மற்றும் போன்ற காரணங்களால் மிகவும் பிரபலமடைந்து வருகின்றன, மேலும் அதன் தனித்துவமான சுவை அனைவரும் அறிந்ததே. பேக்கரி தொழில் வளர்ச்சியானது சுயதொழில் செய்வதற்கான வழிகளை உருவாக்க மிகவும் உதவியாக இருக்கும் என்பதால், இதை சார்ந்த தலைப்பில் பயிற்சி வழங்க TNAU முன் வந்துள்ளது.

சர்க்கரை, கோகோ மற்றும் பால் ஆகியவற்றின் கலவையிலிருந்து பல்வேறு வகையான மிட்டாய் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன, இவற்றுள் செய்யப்படும் பொருட்கள் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவராலும் விரும்பும் உணவாக இருக்கிறது. இதுவே, தொழில்முனைவோராக நினைக்கும் மக்களின் மூலதனமாகும். எனவே, தொழில்முனைவோருக்கான திறன்களை வளர்க்கும் நோக்கத்துடன் இந்தப் பயிற்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இப்பயிற்சியில் பின்வரும் அம்சங்கள் உள்ளடக்கப்படும்:

  • விதவிதமான பிரேட் செய்யும் முறை
  • கேக் மற்றும் பிஸ்கட் வகைகள்
  • சாக்லேட் (வீட்டில் தயாரிக்கும் முறை)
  • பழ மிட்டாய்
  • சிக்கீஸ்
  • லாலிபாப் மற்றும் ஜூஜுப்ஸ்
  • ஃபாண்டண்ட் மற்றும் ஃபட்ஜ்

ஆர்வமுள்ள நபர்கள் பயிற்சிக் கட்டணமாக ரூ.1770.00 (1500/+ GST ​​18%) செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் -
(ரூபாய் ஆயிரத்து எழுநூற்று எழுபது மட்டும்) பயிற்சியின் முதல் நாள் நேரில் செலுத்தி பயிற்சியில் பங்கேற்கலாம்.

பயிற்சி இடம்:

Centre for Post Harvest Technology,
Agricultural Engineering College & Research Institute,
Tamil Nadu Agricultural University,
Coimbatore-641003. (குறிப்பு - தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்,
கோவை-641003
பேருந்து நிறுத்தம்: கேட் எண்.07 (தாவரவியல் பூங்காவிற்கு எதிர் வாயில்), மருதமலை சாலை வழியாக TNAU,
கோயம்புத்தூர்)

மேலும் விவரங்களுக்கு, தொடர்பு கொள்ளவும்:

பேராசிரியர் மற்றும் தலைவர்,
அறுவடைக்கு பிந்தைய தொழில்நுட்ப மையம்,
வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்,
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்,
கோயம்புத்தூர் - 641003.
மின்னஞ்சல்: phtc@tnau.ac.in.
தொலைபேசி: 0422-6611268.

மேலும் படிக்க:

BECIL ஆட்சேர்ப்பு 2022 – 94 காலிப் பணியிடங்கள், ரூ.44,000 சம்பளம்

சதமடிக்க உள்ள சின்னவெங்காயம்! விலை என்ன?

English Summary: TNAU: Training in Bakery and Confectionery Production Published on: 12 October 2022, 02:18 IST

Like this article?

Hey! I am Deiva Bindhiya. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.