தமிழ்நாட்டு அரசு பணியாளர் தேர்வாணையம் நாளை தேர்வை நடத்துகிறது. அதிலும் குறிப்பாக, முதன் முதலில் கணினி வழியிலான தேர்வை நடத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது. டிஎன்பிஎஸ்சி தேர்வு குறித்த விரிவான தகவலை இப்பதிவில் பார்க்கலாம்.
முதன் முறையாக இவ்வண்டு முதல் கணினி வழியில் தேர்வை நடத்துகிறது, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம். இந்த தேர்வை நாளை நடத்த உள்ளது என்பது நினைவுக் கூறத் தக்கது. தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி கிரண் குராலா நேற்று வெளியிட்ட அறிவிப்பில் தேர்வு குறித்த தகவல்களைத் தெரிவித்து உள்ளார்.
மேலும் படிக்க: அதிரடியாகக் குறைந்த தங்கம் விலை! இன்றைய விலை நிலவரம்!
தேர்வும் நேரமும்
மாவட்டக் குழந்தை பாதுகாப்பு அலுவலர் பதவிக்கான கணினி வழித் தேர்வானது காலை 9 மணியளவிலும், பிற்பகல் 1.30 மணியளவிலும் நடைபெற இருக்கிறது. இந்த தேர்வு நேரத்தைக் கடந்து வரும் தேர்வாளர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனக் கூறப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: பெண்களுக்கு இலவசத் தையல் இயந்திரம் தரும் மத்திய அரசு! இன்றே விண்ணப்பியுங்கள்!!
அதோடு, டிஎன்பிஎஸ்சி கணினி வழித் தேர்வுக்கான முக்கியமான விதிமுறைகளைத் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. அவையாவன,
- ஒரே நேரத்தில் ஒரு வினாவுக்கு ஒரு விடையினைத் தேர்வு செய்தல் வேண்டும்.
- தேர்வு தொடங்கும்போது 180 நிமிடங்கள் கணினியின் திரையில் காட்டப்படும்.
- தேர்வு நேரம் குறைய குறைய நேரம் பூஜ்ஜியம் வரை குறைக்கப்பட்டுக் கொண்டே வரும்.
மேலும் படிக்க: 50% மானியத்தில் டிராக்டர் வழங்கும் மத்திய அரசின் திட்டம்! இன்றே அப்ளை செய்யுங்க.!
- பூஜ்ஜியம் வந்தவுடன் தேர்வு தானாக நிறைவடையும்.
- அதோடு, தானாகவே சமர்பிக்கப்படும்.
- வினாக்கள் அனைத்தும் ஏறுமுக வரிசையில் ஒவ்வொன்றாகத் தோன்றும்.
- அதற்கு ஒன்றன் பின் ஒன்றாக விடை கொடுக்க வேண்டும்.
- விடையைத் தேர்ந்தெடுக்கும்போது, ஏதேர்னும் ஒரு விடையில் கிளிக் செய்ய வேண்டும்.
- கிளிக் செய்தவுடன் சமர்பிக்க வேண்டும். குறிப்பாக விடையைச் சமர்பிக்காவிட்டால் விடைகள் சேமிக்கபபடாது எனத் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க: FD-யின் வட்டியை அதிகரித்த வங்கிகள் எவை? புதிய வட்டிவிகிதங்களின் பட்டியல் உள்ளே!
எனவே, மேல் உள்ள அனைத்து விதிமுறைகளையும் கருத்தில் கொண்டு தேர்வை அணுகி வெற்றி பெறுங்கள்.
மேலும் படிக்க
Share your comments