தமிழகத்தில் திருநெல்வேலி மாவட்டம் குற்றாலம் பேரூராட்சியில் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள அருவிதான் ஐந்தருவி. இது குற்றாலத்தில் இருந்து சுமார் 5 கி.மீ. தூரத்தில் உள்ளது. திரிகூடமலையின் உச்சியில் இருந்து 40 அடி உயரத்தில் உருவாகி சிற்றாற்றின் வழியே ஒடும் இந்த தண்ணீர் ஐந்து கிளைகளாக பிரிந்து ஐந்தருவியாக விழுகிறது.
இந்த ஐந்தருவிகளில் பெண்கள் குளிப்பதற்கு தனி கிளைகளும், ஆண்கள் குளிப்பதற்கு தனி கிளைகளுமாக வனத்துறையினர் பிரித்து வைத்துள்ளனர். முக்கிய அருவி எனப்படும் பேரருவியில் பெண்கள் குளிப்பதற்கு தனியான இடம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு உள்ள படகு குழாமில் இயற்கையை பார்த்தவாரு சுற்றுலா பயணிகள் படகு சவாரி செல்வார்கள்.
ஐந்தருவியை சுற்றி கொட்டிக் கிடக்கும் இயற்கை அழகை பார்த்து ரசிக்க சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோர் குடும்பத்துடன் படையெடுக்கின்றனர். குற்றால சீசனுக்கு வரும் சுற்றுலா பயணிகளை ஐந்தருவி அருகே அமைந்துள்ள சுற்றுச்சூழல் பூங்கா கவர்ந்திழுக்கிறது. இங்கு நீரோடை பாலம், நீரூற்று, சிறுவர் விளையாட்டு திடல், தாமரை குளம் உள்ளிட்ட பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளன.
இதே போல கொன்றை மலர்கள், இட்லிப்பூக்கள் என பல்வேறு வகையான மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. பல மாதங்களுக்கு மழை பெய்யாவிட்டாலும் கூட குற்றாலம் ஐந்தருவியில் மட்டும் தண்ணீர் விழுந்துக்கொண்டிருக்கும். மெயின் அருவியின் நீரோடையில் தண்ணீர் விழுகிறதோ இல்லையோ, ஐந்தருவியின் நீரோடையில் தண்ணீர் எப்போது வந்து கொண்டே இருக்கும்.
குற்றாலம் ஐந்தருவியி்ல் சுமார் 40 ஏக்கர் பரப்பரளவில் தமிழ்நாடு அரசு தோட்டக்கலைத்துறை உள்ளது. இங்கு அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள பழத்தோட்டத்தில் மரக்கன்றுகள், பூச்செடிகள், மூலிகை செடிகள் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
இயற்கை எழில் கொஞ்சும் ஐந்தருவியை ஓட்டி வனப்பகுதியில் அமைந்துள்ள இந்த பழத்தோட்ட பண்ணைக்கு ஆண்டுதோறும் சுற்றுலா பயணிகள் குவிகின்றனர். மேலும், கண்ணை கவரும் அழகு செடிகளை வாங்கி செல்வார்கள. ஐந்தருவியின் அருகில் சபரிமலை சாஸ்தா கோயிலும், முருகன் கோயிலும் உள்ளது.
இந்த நீர்வீழ்ச்சியானது குறைந்தபட்சம் 30-40 மீ உயரமும், அதன் ஆயுர்வேத நீரால் துடிக்க விரும்பும் ஏராளமான மக்களை ஈர்க்கும் அளவுக்கு அகலமும் கொண்டது.
தண்ணீரின் ஆயுர்வேத குணப்படுத்தும் பண்புகள் சில நோய்களுக்கான சிகிச்சைக்கான மருந்துகளாக சில மருத்துவர்களால் வெளிப்படையாக பரிந்துரைக்கப்பட்டது.
எப்படியிருந்தாலும், குற்றாலம் அருவியின் குணப்படுத்தும் பண்புகளைப் பொறுத்தவரை, குற்றாலம் பகுதியே "இந்தியாவின் ஸ்பா" என்று அறிவிக்கப்பட்டதையும் நாம் அறிவோம்.
குற்றாலத்தில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் என 3 மாதங்கள் சீசன். தற்போது கேரளாவில் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே பெய்து வரும் நிலையில் மேற்கு தொடர்ச்சி மலையின் உட்பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் அருவிகளில் தண்ணீர் வரத்து துவங்கி சீசன் துவங்கியுள்ளது.
குற்றாலம் மெயின் அருவி ஐந்தருவி மற்றும் பழைய குற்றாலம் சிற்றருவி புலி அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்து சென்றனர்.
குற்றாலம் மலைப்பகுதியில் நேற்று மாலை முதல் கனமழை பெய்து வருவதால் அருவியில் நீர்வரத்து அதிகரித்ததால் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் தடை விதித்தனர்.
இன்னும் பதினைந்து நாட்களில் சீசன் களைகட்டத் தொடங்கியுள்ள நிலையில், அருவிகளில் நீர்வரத்தும், தென்மேற்குப் பருவமழையால் அவ்வப்போது பெய்து வரும் தூறல்களும் பருவத்துக்கு முந்தைய அனுபவத்தைக் கொடுத்துள்ளன. இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் அருவிகளில் செல்பி எடுத்தும் சாரல் மழையில் நனைந்தும் மகிழ்ச்சியை வெளிபடுத்தி வருகின்றனர்.
மேலும் படிக்க:
குற்றாலத்தில் குளிக்க இன்று முதல் அனுமதி!
தமிழகத்தில் வெளுத்து வாங்கும் மழை: குற்றால அருவிகளில் வெள்ளம்
Share your comments