உக்ரைனில் தமிழகத்தைச் சேர்ந்த சுமார் 5,000த்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் சிக்கி தவிக்கின்றனர். நேற்று குண்டு வீச்சில் பீதி அடைய தொடங்கிய உக்ரைன் பொது மக்கள் அச்சத்தில் உள்ளனர்.. இந்நிலையில் இந்தியாவில் இருந்து உக்ரைனுக்கு படிக்க சென்ற மாணவர்கள் பலர் அங்கு சிக்கிக்கொண்டுள்ளனர். அவர்களை தொடர்பு கொள்ளும் எண்களை, இந்த பதிவில் காணலாம்.
போரின் அச்சம் சூழ்ந்துள்ள உக்ரைனில் தமிழகத்தைச் சேர்ந்த நூறு மருத்துவ மாணவிகள் சிக்கித் தவிக்கின்றனர். ஏற்கனவே, குண்டுவீச்சில் 7 பேர் பலி என உக்ரைன் தகவல் தெரிவித்திருக்கிறது. உக்ரைனில் இந்தியா மக்கள் சுமார் இருபதாயிரம் பேர் இருப்பதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உக்ரைனில் உள்ள இந்தியர்களை தொடர்புக்கொள்ள (To contact Indians in Ukraine):
உக்ரைனில் உள்ள இந்தியர்களுக்கான தொலைபேசி எண்கள் +91 11 23012113, +91 11 23014104
மாநில அவசர கட்டுப்பாட்டு மையம் கட்டணமில்லா தொலைபேசி எண் - 1070
திருமதி ஜெசிந்தா லாசரஸ், இஆப., ஆணையர், அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வு ஆணையரகம் - 9445869848, 9600023645, 9940256444, 04-28515288
உக்ரைன் அவசர உதவி மையம் தமிழ்நாடு பொதிகை இல்லம், புதுதில்லி. வாட்ஸ்அப் எண்- 9289516716, மின்னஞ்சல்- ukrainetamils@gmail.com
உக்ரைனில் சிக்கியுள்ள தமிழ்நாட்டு மாணவர்கள் தாயகம் திரும்புவதற்கான பயண செலவை அரசே ஏற்கும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். இன்று காலை 10 மணி வரை 916 பேர் தமிழ்நாடு அரசை தொடர்பு கொண்டு உதவி கேட்டுள்ளனர்.
இரண்டாவது நாளாக போர் தொடர்வதால் மாணவர்கள் அச்சத்தில் உள்ளனர். மேலும் அவர்கள் இரவு முழுவதும் கடும் குளிரில் அவதிப்பட்டு வந்தனர். நேற்று இரண்டு டிகிரி குளிர் இருந்த நிலையில் இன்று மைனஸில் குளிரின் டிகிரி இருப்பது குறிப்பிடதக்கது.நேற்று உக்ரைனுக்கு சென்ற ஏர் இந்தியா, நடுவானில் தத்தளித்து, டெல்லி திரும்பியது. இந்நிலையில் பெற்றோர்கள் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. எனவே, பெற்றோர்கள், ஓன்றிய அரசோ, தமிழ்நாடு அரசோ தனி விமானம், அனுப்பி மாணவிகளை மீட்கும் மாறு பெற்றோர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தமிழகம்: ஸ்மார்ட் ரேஷன் கார்டு பெற விண்ணப்பித்தோர் கவனத்திற்கு...
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் வியாழக்கிழமை (24-02-2022) உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கையை அறிவித்தார், அதாவது பிரிவினைவாதிகளுக்கு ஆதரவாக உக்ரைன் மீது போர் தொடுக்கும் அறிவிப்பாக இது பார்க்கப்படும் வேளையில், “இது பொதுமக்களைப் பாதுகாக்கும் நோக்கம் கொண்டது” என்று புதின் குறியிருக்கிறார். மேலும் உக்ரைன் முழுவதும் போர்களம் பூண்டுள்ளது.
மேலும் படிக்க:
SBI, HDFC, ICICI வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்: அது என்ன?
TNPSC: குரூப் 2, 2 ஏ தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கவும்! விவரம் உள்ளே!
Share your comments