சிபிஎஸ் பென்சன் திட்டத்தை ஒழித்து பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் செயல்பட்டு வருகிறது. புதிய ஆட்சி அமைந்து பல மாதங்கள் ஆகியபிறகும் பழைய பென்சன் திட்டம் இன்னும் அமலுக்கு வராத நிலையில், இன்று சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் அடுத்த முடிவை எடுக்க இருக்கிறது.
பழைய பென்சன் திட்டம் (Old Pension Scheme)
பழைய பென்சன் திட்டத்தில் கிடைத்த பல்வேறு சலுகைகள் சிபிஎஸ் திட்டத்தில் கிடைப்பதில்லை என்பதால், மீண்டும் பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என அரசு ஊழியர்கள் நெடு நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதற்காக சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் உள்ளிட்ட பல்வேறு அரசு ஊழியர் சங்கங்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றன.
ஆட்சிக்கு வந்தால் பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்துவோம் என திமுக தனது தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்திருந்தது. ஆட்சி அமைந்து 19 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் பழைய பென்சன் திட்டம் இன்னும் அமலுக்கு வராமல் உள்ளது. இதுகுறித்து அரசு ஊழியர்களும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுப்பதற்காக இன்று மாலை 8 மணிக்கு சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள், இணை ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களுடன் காணொலி வாயிலாக ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பழைய பென்சன் திட்டம் குறித்த அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி ஆலோசிக்கப்படும்.
மேலும் படிக்க
Share your comments