1. செய்திகள்

தமிழ்நாட்டில் பழைய பென்சன் திட்டம் எப்போது வரும்: வேகமெடுக்கும் போராட்டம்!

R. Balakrishnan
R. Balakrishnan
Old Pension Scheme

தமிழ்நாட்டில் தற்போது அமலில் இருக்கும் CPS திட்டத்தை ரத்து செய்யக்கோரி தமிழ்நாடு அரசு ஊழியர்கள் நடைபயண போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழக அரசு ஊழியர்களின் நீண்ட கால கோரிக்கை பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பதே. தற்போது நடைமுறையில் உள்ள CPS எனப்படும் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் ஊழியர்களுக்கு ஏற்றதாக இல்லை எனவும் இதில் இழப்புகள் அதிகம் எனவும் கூறப்படுகிறது. எனவே பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த தமிழக அரசு ஊழியர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

பழைய பென்சன் திட்டம் (Old Pension Scheme)

தற்போது நடைமுறையில் உள்ள பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அதை ரத்து செய்யக் கோரி ’CPS ஒழிப்பு இயக்கம்’ என்ற பெயரில் அரசு ஊழியர்கள் ஒன்றாக இணைந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பல்வேறு துறை சார்ந்த அரசு ஊழியர்கள் இதில் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களின் முக்கிய நோக்கமே பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ஒழிப்பதுதான்.

முதல்வர் மௌனம்

இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் இப்போது ஒவ்வொன்றாக பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்தி வருகின்றன. ராஜஸ்தான், சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டுவிட்டது. அப்படி இருக்கையில் பல்வேறு விஷயங்களில் மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாகத் திகழும் தமிழ்நாட்டில் மட்டும் இத்திட்டத்தை அமல்படுத்தாமல் இருப்பது ஏன் என்றும், ஏன் இந்த விஷயத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மௌனம் காக்கிறார் எனவும் அரசு ஊழியர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

CPS ஒழிப்பு திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய பென்சன் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று அரசு ஊழியர்கள் தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். 72 மணி நேர உண்ணாவிரதப் போராட்டத்தில் கூட ஈடுபட்டனர். அடுத்ததாக, CPS ஒழிப்பு இயக்கம் சார்பாக நடைபயண இயக்கம் ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி, நேற்று (நவம்பர் 15) சேலம், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபயண போராட்டம் தொடங்கியது.

திண்டுக்கல் மாவட்ட CPS ஒழிப்பு இயக்கம் சார்பாக நடைபயணம் நேற்று தொடங்கியது. முதல் நாள் நடைபயணம் திண்டுக்கல் மாவட்ட எல்லையான பரசுராமபுரத்தில் துவங்கி வத்தலகுண்டு வழியாக நிலக்கோட்டை வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் நிறைவு பெற்றது. இந்தப் பயணத்தில் உணர்வோடு பங்கேற்ற ஊழியர்கள் அனைவருக்கும் குறிப்பாக பெண் சகோதரிகள் உள்ளிட்ட அனைவருக்கும் மாநில ஒருங்கிணைப்பாளர் பிரடெரிக் எங்கல்ஸ் நன்றி தெரிவித்தார். CPS திட்டம் முழுமையாக ரத்து செய்யப்பட இன்றும் நடைபயணம் தொடர்கிறது.

மேலும் படிக்க

EPFO அமைப்பிற்கு 35 சட்ட நிபுணர்கள்: விரைவில் நியமனம்!

அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: ஜனவரியில் வெளியாகும் முக்கிய அறிவுப்பு!

English Summary: When will the old pension scheme come in Tamil Nadu: The struggle to speed up! Published on: 16 November 2022, 02:53 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.