கோயம்பத்தூர் மாவட்டத்தில் இந்த கோடையில் (மார்ச் முதல் மே வரை) 127.3 மிமீ மழை பெய்ய வேண்டிய நிலையில் 73.8 மிமீ மழை மட்டுமே பெய்துள்ளது. இன்னும் சொல்லப்போனால், கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைவாகக் கோடை மழை பெய்துள்ளது.
மேலும் படிக்க: பெண்களுக்கு இலவசத் தையல் இயந்திரம் தரும் மத்திய அரசு! இன்றே விண்ணப்பியுங்கள்!!
வேளாண்மைத் துறையின் தரவுகளின்படி, மாவட்டத்தில் இந்த ஆண்டைக் காட்டிலும் இரண்டு முறை குறைந்த கோடை மழை பெய்துள்ளது என்று தெரியவருகிறது. இதன் அளவீடாக 2016 (52.6 மிமீ) மற்றும் 2019 (73.6 மிமீ) இவை இருக்கின்றன.
கோடை காலத்தில் 10 நாட்கள் மட்டுமே மழை இருந்தது. ஒரு நாள் மழையாகக் கருதப்பட வேண்டுமானால், 24 மணி நேரத்தில் குறைந்தபட்சம் 2.5 மிமீ மழை பெய்யும். மார்ச் மாதத்தில் எந்த மழைநாளும் இல்லை என்றாலும், ஏப்ரல் மாதத்தில் நான்கு மழை நாட்களும் மே மாதத்தில் ஆறு நாட்களும் இருந்தன.
மேலும் படிக்க: தினமும் 7 ரூபாய் சேமித்து 60,000 பென்சன் பெறும் சூப்பர் திட்டம்!
வல்லுநர்கள் கூறுகையில், கோடை மழையின் தன்மை சீரற்றது. எனவே,விவசாயிகள் எந்த விவசாய நடவடிக்கைகளையும் திட்டமிட முடியாது. பெரும்பாலான விவசாயிகள் கோடை மழையைப் பயன்படுத்தி தங்கள் வயல்களைக் காரீப் பருவத்திற்குத் தயார் செய்கின்றனர். ஆழ்துளை கிணறு, கிணறு போன்ற மாற்று நீர் ஆதாரங்கள் உள்ளவர்கள் மட்டுமே கோடை மழையின் போது சாகுபடி பணிகளை மேற்கொள்வர் என்று கூறியுள்ளார்.
மேலும் படிக்க: 50% மானியத்தில் டிராக்டர் வழங்கும் மத்திய அரசின் திட்டம்! இன்றே அப்ளை செய்யுங்க.!
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையத்தின் பேராசிரியரும் தலைவருமான எஸ்.பி.ராமநாதன் கூறுகையில், கோடை மழையை வெப்பச்சலன மழைப்பொழிவு என்கிறார்கள். இது பூமியின் மேற்பரப்பில் இருந்து வெப்பமடைந்த காற்று நீராவியுடன் மேல்நோக்கி எழும்பும் போது நிகழ்கிறது, என்றார்.
மேலும் படிக்க: அதிரடியாகக் குறைந்த தங்கம் விலை! இன்றைய விலை நிலவரம்!
மேலும் அவர் கூறுகையில், கோடையில் ஆங்காங்கே மழையை மட்டுமே எதிர்பார்க்கலாம். இது பயிர்களுக்கு நம்பகத்தன்மை வாய்ந்த மழையல்ல. எனவே, விவசாயிகள் பெரும்பாலும் தங்கள் வயல்களை அடுத்த பயிருக்குத் தயார் செய்ய மட்டுமே பயன்படுத்துகின்றனர். இருப்பினும், மூன்று நாட்களில் பருவமழை எதிர்பார்க்கப்படுவதால், காற்று வேகமாக வருவதால் விவசாயிகள் நேர்மறையாக இருக்க முடியும்," என்று கூறுகிறார்.
மேலும் படிக்க: விவாசாயிகளுக்கு 3% மானியத்தில் கடன் வழங்கும் புதிய திட்டம்! விண்ணப்பிப்பது எப்படி?
வானிலை பதிவர் சந்தோஷ் கிருஷ்ணன் கூறுகையில், கோடை மழை எப்போதும் சீரற்றதாக இருக்கும். "ஆனால் புவி வெப்பமடைதல் மற்றும் காலநிலை மாற்றம் போன்ற காரணிகளால் பல தசாப்தங்களாக மாறுபாட்டின் அளவு அதிகரித்து வருகிறது.
மேலும் படிக்க
அரசு பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்ந்தது!!
கோழி வளர்ப்புக்குக் கடன் வழங்கும் வங்கிகள்! இன்றே பதிவு செய்யுங்கள்!!
Share your comments