இந்தியாவில் பெண்களின் திருமண வயதை 18ல் இருந்து 21 ஆக உயர்த்தும் 'குழந்தை திருமண தடுப்பு மசோதா 2021' லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்தியாவில் பெண்களின் திருமண வயதை 18ல் இருந்து 21 ஆக உயர்த்தலாம் என ஜெயா ஜெட்லி தலைமையிலான நிதி ஆயோக் சார்பில் அமைக்கப்பட்ட குழு பரிந்துரை செய்திருந்தது. இதனையடுத்து கடந்த வாரம் நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்துவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
குழந்தை திருமண தடுப்பு மசோதா 2021
இன்று (டிசம்பர் 21) லோக்சபாவில் இதற்கான 'குழந்தை திருமண தடுப்பு மசோதா 2021' என்னும் மசோதாவை பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் ஸ்மிருதி இரானி மசோதாவை தாக்கல் செய்தார். மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறுகையில், 'இந்த ஜனநாயக நாட்டில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சம உரிமை (Equal Rights) வழங்குவதில் 75 ஆண்டுகள் தாமதமாகி விட்டோம்.
பெண் திருமண வயது 21 (Marriage Age for Women 21)
இந்த சட்டத் திருத்தத்தின் மூலம் முதன்முறையாக ஆண்களும் பெண்களும் 21 வயதில் சமத்துவ உரிமையை மனதில் கொண்டு திருமணம் குறித்து முடிவெடுக்க முடியும்,' என்றார். இந்நிலையில், இந்த மசோதா விரிவான ஆய்வுக்கு பார்லிமென்ட் குழுவுக்கு அனுப்பப்பட்டது.
மேலும் படிக்க
Share your comments