SBI வங்கியின் சார்பாக இளைஞ்சர்களுக்கு 30 நாள் இலவச தொழிற்பயிற்சி வழங்கப்பட இருக்கிறது. இதில் உணவு, தங்கும் இடம் முற்றிலும் இலவசமாகத் தந்து பயிற்சி அளைக்கப்பட இருக்கிறது. பயிற்சி முடிந்ததும் தொழில் தொடங்குவதற்கும் வங்கி கடன் பெற தேவையான ஆலோசனைகள் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் பார்க்கலாம்.
அரியலூர் மாவட்டத்தைச்சார்ந்த வேலையில்லா இளைஞர்களுக்கு ஓர் அரிய நல்ல வாய்ப்பாக ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் (SBI RSETI) இலவச தொழிற்பயிற்சிகளை அறிவித்து இருக்கிறது. பயிற்சி முடிந்ததும் தொழில் தொடங்குவதற்கும் வங்கி கடன் பெற தேவையான ஆலோசனைகள் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
கிராமப்புற ஏழை எளிய குடும்பங்களைச் சார்ந்த இளைஞர்களுக்கு அவர்கள் ஆர்வத்தின் அடிப்படையில் பயிற்சி வழங்கிச் சுய வேலைவாய்ப்பினை உருவாக்க வேண்டும் எனும் நோக்கில் செயல்பட இருக்கிறது. இப்பயிற்சியானது, ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்தந்த மாவட்ட முன்னோடி வங்கி மூலம் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனங்கள் (Rural Self Employment Training Institutes – RSETIs) தனித்தனியே அமைக்கப்பட்டுள்ளன. இத்தகைய பயிற்சி நிறுவனங்கள் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தொழிற்பயிற்சிகளை மேற்கொள்கிறது. அதோடு, இந்த பயிற்சி பெற்ற இளைஞர்களுக்கு தொழில் முன்னெடுப்பை ஊக்கப்படுத்திட வங்கி கடன் இணைப்பு வசதி ஏற்படுத்தித் தரும் நடவடிக்கையும் எடுக்கப்படுகிறது.
இந்த நிலையில், அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனமானது (SBI RSETI) இலவச தொழிற்பயிற்சி வகுப்புகளை அறிவித்து இருக்கிறது
பயிற்சியும், பயிற்சி நாட்கள்
வெல்டிங் & பேபிரிகேஷன் பயிற்சி 30 நாட்கள்
அலுமினியம் & பேபிரிகேஷன் பயிற்சி 30 நாட்கள்
எம்பிரைடரி மற்றும் பூ வேலைபாட்டுப் பயிற்சி 30 நாட்கள்
பெண்களுக்கான சணல் பை தயாரித்தல் பயிற்சி 13 நாட்கள்
காளான் வளர்ப்பு பயிற்சி 10 நாட்கள்
எவ்வித கட்டணமும் இல்லாமல் 100% செய்முறை பயிற்சி, சீருடை, மூன்று வேலையும் உணவு, தேநீர், விடுதியில் தங்கி படிக்கும் வசதி, யோகா பயிற்சி மற்றும் பயிற்சி சான்றிதழ் உட்பட அனைத்தும் இலவசமாக வழங்கப்பட இருக்கிறது. தகுந்த திறன் வாய்ந்த பயிற்சியாளர்களைக் கொண்டு பயிற்சியளிக்கப்பட இருக்கிறது. பயிற்சி முடிந்ததும் தொழில் தொடங்குவதற்கும் வங்கி கடன் பெறத் தேவையான ஆலோசனைகள் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்பயிற்சிகளுக்கு வருகின்ற ஏப்ரல் 4ம் தேதி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஏப்ரல் 6ம் தேதி முதல் பயிற்சி தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
வயது வரம்பு:18 முதல் 45 வயது வரை இருத்தல் வேண்டும்.
கல்வி தகுதி: எழுத, படிக்க தெரிதல் வேண்டும்.
தேவையான ஆவணங்கள் என்று பார்க்கும்பொழுது ஆதார் கார்டு நகல், ரேசன் கார்டு நகல், மாற்று சான்றிதழ் நகல்(TC), 100 நாள் வேலை அட்டை நகல் மற்றும் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ-4 வங்கி கணக்குப்புத்தக நகல் முதலியவற்றை எடுத்து வருதல் வேண்டும். இப்பயிற்சிகளுக்கு முன்பதிவுகள் வரவேற்கப்படுகின்றன. மேலும் விவரங்களுக்கு: 9944850442, 7539960190, 9626644433, 7558184628 ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளலாம் எனக் கூறப்படுகிறது.
பயிற்சி வழங்கும் முகவரியானது, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் (RTO அலுவலகம் பின்புறம்), திருச்சி மெயின் ரோடு, கீழப்பழுர், அரியலூர்-621707. 04329-250173 என்பதாகும்.
மேலும் படிக்க
விவசாயிகளுக்குச் சலுகை! Grains இணையதளத்தில் இன்றே பதிவு செய்யுங்க!!
விவசாயிகளுக்கு ரூ.15,000 இழப்பீடு! அரசின் திட்டம் என்ன தெரியுமா?
Share your comments