கொரோனா நெருக்கடிக் காலங்களில் ஏழைகள் உணவு கிடைக்காமல் தவிக்கக்கூடாது என்பதைக் கருத்தில்கொண்டு, மே, ஜூன் மாதங்களுக்கு 5 கிலோ உணவு தானியங்கள் இலவசமாக வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
கொரோனா 2-வது அலை (Corona 2nd wave)
இந்தியாவில் கொரோனா வைரசின் 2-வது அலை வேகமாகப் பரவி வரும் நிலையில், பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.
பிரதமர் ஆலோசனை (Prime Minister's advice)
கொரோனாப் பரவலைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக பிரதமர் மோடி தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார். பாதிப்பு அதிகம் உள்ள 11 மாநிலங்களின் முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
இதனையடுத்து பிரதமர் மோடி முக்கிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
5 கிலோ தானியங்கள் (5 kg of grains)
கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக ஏற்படும் சிரமத்தைக் குறைக்கும் வகையில், பிரதமரின் கரீப் கல்யாண் திட்டத்தில், மே மற்றும் ஜூன் மாதத்திற்கு 5 கிலோ தானியங்கள் இலவசமாக வழங்கப்படும்.
80 கோடி மக்கள் (80 crore people)
ரூ.26 ஆயிரம் கோடி செலவில் உணவு தானியங்கள் வழங்குவதன்மூலம் 80 கோடி மக்கள் பயனடைவார்கள்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
கொரோனா தடுப்பூசி விநியோகிக்க டிரோன் பயன்பாடு! ஆய்வு செய்ய அரசு அனுமதி!
கொரோனா தடுப்பூசிக்கு ஏப்ரல் 24 முதல் முன்பதிவு துவக்கம்! 18 வயதை கடந்தவர்கள் பதிவு செய்யலாம்!
உலக பூமி தினம்! பிளாஷ்டிக்கை தவிர்த்து, நம் பூமியை மீட்டெடுப்போம்!
Share your comments