மத்திய அரசு ஊழியர்களுக்கு பம்பர் செய்தி ஒன்று இன்று கிடைத்துள்ளது. ஊழியர்களின் அகவிலைப்படியில் 4 சதவிகித அதிகரிப்புக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது மகிழ்ச்சிக்குரிய செய்தியாக இருக்கிறது. இது குறித்த விரிவான தகவலை இப்பதிவில் பார்க்கலாம்.
இன்று (புதன்கிழமை) நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு குறித்து முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அரச ஊழியர்களின் அகவிலைப்படியை 4 சதவீதம் அதிகரிக்க அமைச்சரவை இன்று அங்கீகாரம் வழங்கியுள்ளது. தற்பொழுது உள்ள அகவிலைப்படி 34 சதவீதமாக இருக்கிறது. இது தற்போது 4 சதவீதம் அதிகரித்த பின்னர், 38 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த முடிவால் தற்போதுள்ள 50 லட்சம் மத்திய ஊழியர்களும், 62 லட்சம் ஓய்வூதியதாரர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
மேலும் படிக்க: Amazon, Flipkart-இல் 85% தள்ளுபடி ஆஃபர்கள்!
2022 ஆம் ஆண்டு ஜூலை 1 ஆம் தேதி முதல் அரசாங்கத்தின் அகவிலைப்படி உயர்வு அமலுக்கு வரும் எனக் கூறப்பட்டுள்ளது. முன்பு, மார்ச் 2022 இல், ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படியை அதிகரிப்பதாக அரசாங்கம் அறிவித்திருந்தது. அப்பொழுது மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 31 சதவீதத்தில் இருந்து 34 சதவீதமாக உயர்த்தப்பட்டு இருந்தது. தற்பொழுது அது 38 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதன்படி, அரசு ஊழியர்களுக்குச் செப்டம்பர் மாத சம்பளத்தில் இரண்டு மாத டிஏ ஏரியர் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.
அனைத்திந்திய நுகர்வோர் விலைக் குறியீடு- தொழில்துறை குறியீட்டின் தரவை, லட்சக்கணக்கான ஊழியர்களின் அகவிலைப்படியை அதிகரிப்பதற்கான அடிப்படையாக மத்திய அரசு கருதுகிறது எனக் கூறுகின்றனர். முதல் பாதிக்கான AICPI-IW தரவுகளின் அடிப்படையில் ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி அறிவிக்கப்பட்டிருந்தது. ஜூன் மாதத்தில் குறியீட்டு எண் 129.2 ஆக உயர்ந்ததால், 4 சதவீதமாக டிஏ உயர்த்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், 38% உயர்த்தப்பட்டால், ஒரு குறிப்பிட்ட பணியாளரின் அடிப்படை சம்பளம் ரூ. 18,000 என இருந்தால் மாதம் ரூ. 6840 எனக் கிடைக்கும். அதுவே ஒரு குறிப்பிட்ட ஊழியரின் அடிப்படை சம்பளம் ரூ. 56,900 என இருந்தால் மாதம் ரூ. 21,622 எனக் கிடைக்கும். இந்த அறிவிப்பையடுத்து ஊழியர்கள் பெரு மகிழ்ச்சியில் உள்ளனர்.
மேலும் படிக்க
வேளாண் அப்டேட்ஸ்: பயிர்களுக்கான இந்தியாவின் 42-வது தேசிய மாநாட்டுப் பொதுக்கூட்டம்!
Share your comments