1. மற்றவை

7th Pay Commission: அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு! பெரிய ஏற்றம்!!

Poonguzhali R
Poonguzhali R
DA hike for government employees! A Big Surprice!!

அரசானது தொடர்ந்து ஊழியர்களுக்கு அடுத்தடுத்து மகிழ்ச்சியான செய்திகளைத் தந்த வண்ணம் இருக்கின்றது. அந்த வகையில் இம்முறையும் ஒரு மகிழ்ச்சி செய்தி அரசு ஊழியர்களுக்குக் காத்துக் கொண்டு இருக்கிறது. அது என்ன செய்தி? என்ன நல்ல மாற்றம் ஏற்படப் போகிறது என்பதைக் குறித்து இப்பதிவில் விரிவாக விளக்கப்படுகிறது.

 

இந்த மாதமான ஜூலையிலிருந்து அகவிலைப்படியில் பம்பர் அதிகரிப்பு இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த முறை அகவிலைப்படி உயர்வு ஊழியர்களுக்குப் பெரும் மகிழ்ச்சியை அளிக்கும் செய்தியாக இருக்கும். இத்தகவல் மே மாதத்திற்கான ஏஐசிபிஐ குறியீட்டின் தரவுகளிலிருந்து தெரிய வருகிறது.

ஏஐசிபிஐ குறியீட்டு எண்களில் காணப்பட்ட முன்னேற்றத்தினைத் தொடர்ந்து இந்த டிஏ அதிகரிப்பு ஏற்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. கடந்த பிப்ரவரி மாதத்திற்குப் பின்பு தொடர்ந்து வேகமாக வளர்ந்து வரும் ஏஐசிபிஐ குறியீட்டின் தரவுகளிலிருந்து, ஜூலை மாதத்தில் டிஏ அதிகரிப்பு குறைந்தது 6 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் படிக்க: விவசாயிகளுக்கு ரூ. 8000 ஊக்கத்தொகை! இன்றே விண்ணப்பியுங்க!!

ஏப்ரலுக்குப் பிறகு, மே மாத ஏஐசிபிஐ குறியீட்டின் எண்ணிக்கையில் பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த குறியீடு இம்முறை 1.3 புள்ளிகள் உயர்ந்து 129 புள்ளிகளாக அதிகரித்து இருக்கிறது. இப்போது ஜூன் மாதத்தின் எண்ணிக்கை மட்டும் வர இருக்கிறது. ஜூன் மாதத்தில் ஏஐசிபிஐ குறியீடு நல்ல அளவைப் பெற்றால், டிஏ 6 சதவீதமாக அதிகரிக்க இருக்கிறது.

மேலும் படிக்க: ஆடு வளர்க்க 90% மானியம்! விண்ணப்பித்துப் பயனடையுங்க!!

ஜனவரி 2022 இல் 125.1 ஆக இருந்த ஏஐசிபிஐ குறியீட்டு எண்ணிக்கை, பிப்ரவரியில் 125 ஆகக் குறைந்தது. பிப்ரவரி மாத புள்ளி விவரம் குறைந்ததை அடுத்து மத்திய ஊழியர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த எண்ணிக்கை அவர்களது ஊதியத்தில் டிஏ குறித்த பல்வேறு கேள்விகளை எழுப்பியது. ஆனாலும் அதன் பின்பு இந்த எண்ணிக்கை வேகமாக அதிகரித்து இப்போது மே மாதத்தில் 129 புள்ளிகளை எட்டியது. இதனால் அகவிலைப்படியில் உறுதியான அதிகரிப்பு ஏற்படும் என்ற தெளிவு கிடைத்திருக்கிறது.

அரசு ஊழியர்களின் டிஏவில் 6 சதவீதம் உயர்த்தப்பட்டால், அது 40 சதவீதமாக உயரும். தற்பொழுது மத்திய அரசு ஊழியர்களுக்கு 34 சதவீதம் அகவிலைப்படி வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், டிஏ 40 சதவீதமாக உயர்ந்தால், சம்பளத்தில் குறிப்பிடத்தக்க ஏற்றம் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க

7th Pay Commission: அரசு ஊழியர்களுக்கு இரட்டை மகிழ்ச்சி! குவியும் சலுகைகள்!!

ஆடு வளர்ப்புக்கு ரூ. 4 லட்சம் தரும் மத்திய அரசின் திட்டம்!!

English Summary: 7th Pay Commission: DA hike for government employees! A Big Surprice!! Published on: 01 July 2022, 12:29 IST

Like this article?

Hey! I am Poonguzhali R. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.