கிரிஷி ஜாக்ரன் என்பது விவசாயத் துறையை ஆதரிக்கும் நோக்கில் செயல்படும் சேனலாகும். விவசாயம், அறுவடைக்குப் பிந்தைய மேலாண்மை, கால்நடைகள், பண்ணை இயந்திரமயமாக்கல் மற்றும் பயிர் ஆலோசனை போன்றவற்றின் விரிவான தகவல்களை ஆன்லைனில் வழங்குவதை நோக்கமாகக் கொண்ட பக்கம் ஆகும். இது தவிர விவசாயத் துறை, நிகழ்வுகள் மற்றும் சந்தை விலைகள் பற்றிய அனைத்து சமீபத்திய புதுப்பிப்புகளையும் கிரிஷி ஜாக்ரன் வழங்குகிறது. அத்தகியய கிருஷி ஜாக்ரன் இன்று (11.06.2022) அக்ரி ஸ்டார்ட் அப், கொவாப்ரட்டிவ் மற்றும் எஃப்.பி.ஓ சம்மிட் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த கூட்டத்தை நடத்தியது.
50% மானியத்தில் நெல் அறுவடை இயந்திரம் பெறுவது எப்படி? இன்றே விண்ணப்பியுங்கள்!
உலகிலேயே இரண்டாவது பெரிய விவசாய நிலத்தை இந்தியா கொண்டுள்ளது. கிராமப்புற இந்திய குடும்பங்களில் சுமார் 60% விவசாயத்தையே வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளனர். FY10 முதல் FY18 வரையிலான CAGR இல் 16.4% வளர்ச்சியைக் கண்டது. இந்தியாவில் இருந்து விவசாய ஏற்றுமதி FY19 இல் 38.54 பில்லியன் அமெரிக்க டாலர்களையும், FY20 இல் (நவம்பர் 2019 வரை) 22.69 பில்லியன் அமெரிக்க டாலர்களையும் எட்டியது.
காலி மதுபாட்டிலுக்கு ரூ.10 வழங்கப்படும்: அதிரடி அறிவிப்பு!
விவசாயிகளுக்கான பல முன்முயற்சிகளுடன், 2022 ஆம் ஆண்டிற்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதை அரசாங்கம் இலக்காகக் கொண்டுள்ளது. எனவே, இந்திய வேளாண்மைத் தொடக்கங்களின் பட்டியலைத் தொகுத்துள்ளோம், அவை விரைவான வளர்ச்சியை அதிகரித்து வருகின்றன.
இனி உங்க காட்டில் பணமழைதான்! அதிக வருவாய் தரும் SB அக்கவுண்ட்!
இந்தியாவில் விவசாயத் துறையானது காலாவதியான உபகரணங்களின் பயன்பாடு, முறையற்ற உள்கட்டமைப்புப் போன்ற பல்வேறு பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டு வருகிறது, மேலும் விவசாயிகள் பயிர் விற்பனையில் குறைந்த லாபம் ஈட்டும் போது பரந்த அளவிலான சந்தைகளை எளிதாக அணுக முடியவில்லை. முறையான உள்கட்டமைப்பு மற்றும் விநியோகச் சங்கிலி மேலாண்மை ஆகியவை மிகவும் அழுத்தமான கவலைகளாக உள்ளன.
TNUSRB SI Admit Card 2022 வெளியாகியது: நேரடி இணைப்பு உள்ளே!
தொழில்நுட்பம், டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் ஸ்டார்ட்அப் கலாச்சாரம் ஆகிய துறைகளின் முன்னேற்றத்துடன், இந்திய ஸ்டார்ட்அப் சுற்றுச்சூழல் அமைப்பில் பல புதியவர்கள் நுழைகின்றனர். இந்தியாவில் உள்ள அக்ரி ஸ்டார்ட்அப்கள் விவசாயிகளுக்கு தகவல், நுட்பங்கள் மற்றும் திறன்களை வழங்குகின்றன.
கூட்டுறவு கடன் சங்கங்களில் கடன்: விவசாயிகள், மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்!
கூட்டுறவு என்பது "தங்கள் பொதுவான பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார தேவைகளை கூட்டாகச் சொந்தமான நிறுவனத்தின் மூலம் பூர்த்தி செய்வதற்காக தானாக முன்வந்து ஒன்றுபட்ட நபர்களின் தன்னாட்சி சங்கமாகும்".
செகண்ட் ஹேண்ட் பைக்கை வாங்குபவரா நீங்கள்? மக்களே உஷார்!
கூட்டுறவு வணிகங்கள் பொதுவாக மற்ற பல வகையான நிறுவனங்களைக் காட்டிலும் அதிக உற்பத்தித் திறன் கொண்டவை. அதோடு, பொருளாதார ரீதியாக மீள்தன்மை கொண்டவை. கூட்டுறவு நிறுவனங்கள், சமூக இலக்குகளைக் கொண்டிருக்கின்றன. அவை வர்த்தக லாபத்தின் விகிதத்தை மீண்டும் தங்கள் சமூகங்களில் முதலீடு செய்வதன் மூலம் நிறைவேற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட Health Card! எப்படி பெறுவது?
ஒருங்கிணைப்பு மற்றும் சேகரிப்பு சக்தியைப் பயன்படுத்தி, விவசாயிகளை ஒன்றிணைத்து, சந்தையில் தங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு, உழவர் கூட்டங்கள் மிகவும் விரும்பப்படும் நிறுவனக் கட்டமைப்பாக இருக்கும் அமைப்புதான் உழவர் உற்பத்தியாளர் அமைப்பு (FPO) ஆகும். விவசாயிகளை ஊக்குவிக்க இந்திய அரசு ஒருங்கிணைந்த முயற்சிகளை எடுத்துள்ளது.
சம்பா பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்வு!
சந்தையில் விவசாயிகளின் இருப்பை மேம்படுத்தவும், கிடைக்கக்கூடிய வளங்களை அணுகுவதற்கும், அதன் விளைவாக, அவர்களின் விளைபொருட்களுக்கு சிறந்த மதிப்பு கிடைப்பதற்கும் FPOக்கள் உருவாக்கப்படுகின்றன. இந்த வகையில் FPO மிகுந்த பயனுடியதாக இருக்கின்றது. இத்தகைய மூன்று பெறும் அமைப்புகளை ஒருங்கிணைத்து கிருஷி ஜாக்ரன் இந்த மாலை நிகழ்வை நிகழ்த்தியுள்ளது.
விவசாயிகளுக்கான நபார்டு வங்கியின் கடன் திட்டம்: என்னென்ன?
இக்கூட்டத்தில் பல்வேறு ஆளுமைகள் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்கள். அனைவரின் கருத்துக்களும், குரல்களும் விவசாயத்திற்கான உந்துதலை ஏற்படுத்தும் குரல்களாக இருந்தன.
இந்த கூட்டம் சுமார் ஒன்றரை மணி நேரம் நடைபெற்றது. நிகழ்வின் இறுதியில் தேநீர் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டு இவ்வாறு இந்த சிறப்பான நிகழ்வு நிறைவுற்றது.
3 லட்சம் மானியத்தில் சோலார் மின் இணைப்பு பெறுவது எப்படி?
பல்வேறு ஆளுமைகளை அழைத்து உரை நிகழ்வைத் தொடர்ந்து நிகழ்த்தினாலும், அனைத்து நிகழ்வுகளிலும் இது மிகுந்த குறிப்பிடத்தக்க நிகழவாகக் கருதப்படுகிறது. இது போன்ற சிறந்த நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெறும் என கிருஷி ஜாக்ரன் நிறுவனத் தலைவர் திரு டாமனிக் தெரிவித்தார்.
மேலும் படிக்க
விவசாய ஊடகம் மற்றும் தொழில்துறை அமைப்பின் கூடுகை: கூட்டத்தின் சாரம் என்ன?
ஃபிக்சட் டெபாசிட் (FD) வட்டி விகிதம் உயர்வு! மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
Share your comments