NPS திட்டத்தில் அரசாங்கத் துறை ஓய்வூதிய நிதி, கார்ப்பரேட் துறை ஓய்வூதிய நிதி மற்றும் மாற்று முதலீட்டு நிதி ஆகியன உள்ளிட்ட பல ஓய்வூதிய நிதிகள் இருக்கின்றன. இது குறித்த விரிவான தகவலை இப்பதிவில் பார்க்கலாம்.
NPS எனப்படும் நேஷனல் பென்ஷன் சிஸ்டம் அரசால் செயல்படுத்தப்படும் ஓய்வூதியத் திட்டம் ஆகும். இந்த திட்டத்தின் மூலம் தனிநபர்கள் தங்களது ஓய்வுக்குப் பிறகு ஒரு நிலையான வருமானத்தை மாதந்தோறும் ஓய்வூதியமாக பெறமுடியும். இந்த NPS திட்டத்தில் நீங்கள் மாதந்தோறும் ரூ.50,000 வரை ஓய்வூதியம் பெற வேண்டும் என விரும்பினால், இந்த திட்டத்தில் ஒவ்வொரு நாளும் ரூ.200 முதலீடு செய்ய வேண்டும் எனக் கூறப்படுகிறது.
NPS திட்டத்தில் இணைந்துகொள்ள விரும்புபவர்கள் தேசிய ஓய்வூதிய அமைப்பு அறக்கட்டளை (NPS ட்ரஸ்ட்) இணையதளத்திற்குச் சென்று பதிவு செய்யலாம். இதற்கான பதிவு செயல்முறையை நிறைவு செய்ய மக்களுக்கு பாயின்ட் ஆஃப் பிரசன்ஸ் (பிஓபி) அல்லது பாயின்ட் ஆஃப் பிரசன்ஸ் - சர்வீஸ் புரோவைடர் (பிஓபி-எஸ்பி) உதவிகரமாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
NPS திட்டத்தினைத் திறந்ததும் உங்களுக்கான ஓய்வூதிய நிதி மற்றும் முதலீட்டு விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து அதற்கேற்ப முதலீடு செய்ய தொடங்கலாம் என்பதாகும். என்பிஎஸ் திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்வதன் மூலமாக உங்களுக்கு வரிச் சலுகைகள், நெகிழ்வுத்தன்மை மற்றும் நிதிகளின் தொழில்முறை மேலாண்மை போன்ற நன்மைகள் கிடைக்கப்பெறும் எனக் கூறப்படுகிறது.
NPS திட்டத்தின் கீழ் வருமான வரிச் சட்டத்தின் 80சிசிடி (1பி) பிரிவின் கீழ் ஆண்டுக்கு ரூ.50,000 வரை தனிநபர் வரி விலக்கு கேட்கலாம். அதோடு, இந்த திட்டத்தில் உங்கள் முதலாளி பங்களித்திருந்தால் அவர் பிரிவு 80சிசிடி (1சி)-ன் கீழ் ஆண்டுக்கு ரூ.50,000 வரை கூடுதல் வரி விலக்கு கேட்க இயலும்.
NPS திட்டத்தில் அரசாங்கத் துறை ஓய்வூதிய நிதி, கார்ப்பரேட் துறை ஓய்வூதிய நிதி மற்றும் மாற்று முதலீட்டு நிதி உட்பட பல ஓய்வூதிய நிதிகள் இருக்கிறது. என்பிஎஸ் திட்டத்தில் சுயதொழில் செய்பவர்கள், சம்பளம் பெறும் ஊழியர்கள் மற்றும் வணிக உரிமையாளர்கள் உட்பட இந்தியாவின் அனைத்து குடிமக்களுக்கும் முதலீடு செய்யலாம் எனக் கூறப்படுகிறது.
இந்த திட்டத்தில் சேர்பவர்களுக்குக் குறைந்தபட்சம் 18 வயது இருக்க வேண்டும். அதோடு, இதில் அதிகபட்ச வரம்பு நிர்ணயிக்கவில்லை. 25 வயதுடைய ஒரு நபர் இதில் ஒவ்வொரு நாளும் ரூ.200 என்கிற கணக்கில் முதலீடு செய்கிறார் என்றால் அவரது 60 வயதில் அவருக்கு சுமார் ரூ.50 லட்சம் வரை வருமானம் கிடைக்கும் என்பது நோக்கத்தக்கது. அவர்களது சராசரி ஆண்டு வருமானம் 8 சதவிகிதம் எனில் முதலீட்டாளர் ஓய்வு பெற்ற பிறகு மாதத்திற்கு ரூ.50,000 ஓய்வூதியமாக கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.
மேலும் படிக்க
Share your comments