வட்டெழுத்து என்பது கி.பி மூன்றாம் நூற்றாண்டு முதல் கி.பி பத்தாம் நூற்றாண்டு வரை தமிழ் மொழியை எழுதப் பயன்பட்டு வந்த ஓர் எழுத்து முறை ஆகும். இதே எழுத்து முறையில் மலையாள மொழியை எழுதவும் பயன்படுத்தினர் எனபர் ஆராய்ச்சியாளர்கள்.
வட்டெழுத்து முறை என்பது பிராமி எழுத்து முறையில் இருந்து தோன்றியது ஆகும். கி.பி எட்டாம் நூற்றாண்டில் வட்டெழுத்து, கிரந்த எழுத்துடன் இணைந்து மணிப்பிரவாள நடையாக எழுதப்பட்டது என்றும் கூறுவர். இந்நிலையில் இந்த வட்டெழுத்தின் காலம் என்பது கி.பி மூன்றாம் நூற்றாண்டு முதல் எட்டாம் நூறாண்டு வரையாக இருக்கிறது என்பதை முன்னரே கண்டோம். அந்த வகையில் வட்டெழுத்தில் எழுதப்பட்ட ஒரு கல் பலகை திருப்பூரில் கண்டறியப்பட்டுள்ளது.
90cm உயரமும் 30cm அகலமும் கொண்ட இந்த கல்லில் விக்ரம சோழன் எனும் மன்னன், சிவன் கோவில் அல்லது ஜெயின் கோவிலுக்கு மானியம் வழங்குவது பற்றி 17 கோடுகளில் தகவலகள் உள்ளன என்று கண்டறியப்பட்டுள்ளது.
கி.பி.1004ல் ஆட்சிக்கு வந்த கோணத்துக் கொங்கு சோழ வம்சத்தின் மூன்றாவது மன்னனான விக்ரம சோழனின் 34வது ஆட்சியாண்டில் இந்த கல்வெட்டு உருவாக்கப்பட்டிருக்க வேண்டும் எனக் கணிக்கின்றனர். கல்லில், விக்ரம சோழனின் தந்தையின் பெயர் கோகாளிமூர்க்கன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த கல்வெட்டு பிரபல வரலாற்றாசிரியர் ஒய் சுப்பராயலு என்பவரால் புரிந்து கொள்ளப்பட்டது. “மத்தியபுரீஸ்வரர் சிவன் கோயில் என்று அழைக்கப்படும் நாட்டுராமதர் கோயிலில் கல்லைக் கண்டு பிடித்துள்ளனர். காங்கயம் இடைக்கால கல்வெட்டுகளில் பழஞ்சேர்பலி அல்லது பழஞ்சேர்பள்ளி என்று அழைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
“பளி, பல்லி என்ற சொற்கள் சமணத் தத்துவஞானிகள் தங்கி அறம் சார்ந்த கல்வியைப் போதித்ததைக் குறிக்கிறது. அதோடு, ஏழைகளுக்கு உணவு, மருந்து, அடைக்கலம் கொடுத்த இடத்தைக் குறிக்கின்து. இப்போதும் அதே காங்கேயம் கிராமத்தில் 10ம் நூற்றாண்டைச் சேர்ந்த மகாவீரரின் சிற்பம் உள்ளது என்பதும் சிறப்பிற்கு உரியது.
திருப்பூரில் உள்ள காங்கேயம் பகுதியும் வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தகுந்த பகுதியாக இருந்திருக்கிறது.
மேலும் படிக்க
Share your comments