ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) தீபாவளியை முன்னிட்டு தனது ஊழியர்களுக்குப் போனஸ் தொகையை அறிவித்துள்ளது. சமூகப் பாதுகாப்பு அமைப்பாக விளங்கும் EPFO அக்டோபர் 19 தேதி வெளியிட்ட அறிக்கையில் தனது அனைத்து குரூப் 'சி' மற்றும் குரூப் 'பி' ஊழியர்களுக்கும் உற்பத்தித்திறன் சார்ந்த போனஸ் (PLB) வழங்குவதாக அறிவித்து உள்ளது. இந்தப் போன்ஸ் அறிவிப்பு மூலம் EPFO அமைப்பின் ஊழியர்கள் உற்பத்தித்திறன் சார்ந்த போனஸ் (PLB) தொகையாக அதிகப்படியாக 13,806 ரூபாய் அளவிலான தொகையை அளிக்க உள்ளது.
EPFO அமைப்பு
2021-22 ஆம் ஆண்டிற்கான பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் தகுதியான குரூப் சி மற்றும் குரூப் பி ஊழியர்களுக்கு, உற்பத்தித்திறன் இணைக்கப்பட்ட போனஸ் தொகை அதிகப்படியாக 60 நாட்கள் ஊதியத்திற்குச் சமமான தொகையைப் போன்ஸ் ஆக வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.
13,806 ரூபாய்
இதன் மூலம் 2021-22 ஆம் ஆண்டிற்கான பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் குரூப் சி மற்றும் குரூப் பி ஊழியர்கள் 13,806 ரூபாய் அளவிலான தொகையைப் போனஸ் ஆகப் பெற உள்ளனர். இது EPFO ஊழியர்களுக்குத் தீபாவளிக்குக் குட்நியூஸ் ஆக மாறியுள்ளது.
PLB கணக்கீடு
குரூப் சி மற்றும் குரூப் பி பிரிவில் இருக்கும் ஒரு தகுதியான பணியாளர், இந்தப் பார்முலா படி உற்பத்தித்திறன்-இணைக்கப்பட்ட போனஸ் தொகையைப் பெறுவார்கள். அதாவது ஒரு ஊழியரின் சராசரி ஊதியங்கள் x போனஸ் நாட்களின் எண்ணிக்கை / 30.4 அதன் அடிப்படையில் தான் போனஸ் கிடைக்கும். 2021-22 ஆம் ஆண்டிற்கான PLB க்கு எதிரான முன்பணத் தொகையை அக்டோபர் 20, 2022 க்குள் தகுதியான ஊழியர்களுக்குச் செலுத்தப்படலாம் என EPFO தெரிவித்துள்ளது.
PF வட்டி
மத்திய அரசு அறிவித்தது படி 2022 ஆம் நிதியாண்டுக்கான வைப்புத் தொகைக்கு 8.1 சதவீதம் வட்டி வருமானத்தை அளிக்க உள்ள நிலையில் பிஎப் கணக்கில் 10 லட்சம் ரூபாய் வைத்துள்ளவர்களுக்கு 81000 ரூபாய் அளவிலான வட்டி தொகையைப் பெற உள்ளனர். இதுவே பிஎப் கணக்கில் 1 லட்சம் ரூபாய் இருந்தால் உங்கள் 8100 ரூபாய் வட்டி பணம் கிடைக்கும்.
மேலும் படிக்க
தீபாவளி வருவதால் வங்கிகளுக்கு 6 நாட்கள் விடுமுறை: விவரம் இதோ!
பென்சன் கணக்கு தொடங்குவது மிகவும் ஈசி: பென்சன் ஆணையத்தின் புதிய வசதி!
Share your comments