அரசு ஊழியர்களுக்கு அரசு சிறப்பான ஒரு சலுகையினைக் கொடுத்துள்ளது. அதாவது, அரசு ஊழியர்கள் இனி வரும் ஒரு ஆண்டுக்கு வீட்டிலிருந்தே வேலை செய்யலாம் என மத்திய அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு குறித்த விரிவான தகவலை இப்பதிவில் பார்க்காலாம்.
2020ஆம் ஆண்டில் இந்தியாவில் கொரோனா பிரச்சினைகள் வந்த பின்பு வீட்டிலிருந்தே வேலை பார்க்கும் நடைமுறை என்பது பிரபலமானது. சொல்லப் போனால் நிறைய நிறுவனங்களில் இந்த நடைமுறை கட்டாயமாக்கப்பட்டது. அதேபோலவே, இப்பொழுது அரசு சார்ந்த சிறப்பு பொருளாதார மண்டலங்களில் பணியாற்றும் ஊழியர்கள் ஒரு ஆண்டுக்கு வீட்டிலிருந்தே வேலை செய்யாலாம் என மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
மேலும் படிக்க: 7th Pay Commission: அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு! பெரிய ஏற்றம்!!
முந்தைய ஆண்டுகளிலேயே ஐடி நிறுவனங்கள் உள்ளிட்ட துறைகளில் வீட்டிலிருந்து வேலைபார்க்கும் நடைமுறை என்பது செயல்பாட்டில் இருந்தாலும் கொரோனா பிரச்சினை வந்த பிறகு இன்னும் பெரும் அளவில் வெளிப்பட்டது. தொழிலாளர்கள் பலர் மீண்டும் அலுவலகத்துக்கு வரத் தயக்கம் காட்டிவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த அளவுக்கு வீட்டிலிருந்தே வேலை செய்யும் நிலையை நன்றாகப் பழகிவிட்டனர் எனக் கூறலாம்.
மேலும் படிக்க: ஆடு வளர்க்க 90% மானியம்! விண்ணப்பித்துப் பயனடையுங்க!!
இந்த நிலையில், தொழிலாளர்கள் வீட்டிலிருந்து வேலை பார்ப்பதற்கான விதிமுறையானது மாற்றப்பட்டுள்ளது. இந்த விதிமுறை சிறப்பு பொருளாதார மண்டலங்களில் (SEZ) வேலைபார்க்கும் ஊழியர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்ற அறிவிப்பு வெளிவந்துள்ளது. இதற்கான அறிவிப்பை மத்திய வர்த்தக அமைச்சகம் வெளியிட்டு இருக்கிறது.
மேலும் படிக்க: 7th Pay Commission: அரசு ஊழியர்களுக்கு இரட்டை மகிழ்ச்சி! குவியும் சலுகைகள்!!
சிறப்பு பொருளாதார மண்டலங்களில் பணியாற்றும் மொத்த ஊழியர்களில் அதிகபட்சம் 50 சதவீத ஊழியர்களுக்கு மட்டுமே இந்த சலுகை வழங்கப்பட வேண்டும் எனவும் மத்திய அரசு கட்டுப்பாட்டினை விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க
ஆடு வளர்ப்புக்கு ரூ. 4 லட்சம் தரும் மத்திய அரசின் திட்டம்!!
50% மானியம் வேண்டுமா? நாட்டுக்கோழி வளர்ப்புக்கு இன்றே பதிவு செய்யுங்கள்!
Share your comments