1. மற்றவை

அரசின் புதிய அறிவிப்பு: தமிழக அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி!!

T. Vigneshwaran
T. Vigneshwaran
New Pension Scheme

அரசு ஊழியர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி வந்துள்ளது. தங்கள் ஓய்வூதிய திட்ட முறை மாற்றப்பட வேண்டும் என்று அரசு ஊழியர்கள் நீண்ட காலமாக கேட்டுக் கொண்டிருந்த நிலையில், தற்போது இது சாத்தியமாகும் என்ற தகவல்கள் தெரிய வந்துள்ளன.

அரசு ஊழியர்கள் கேட்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த தமிழக அரசு திட்டமிடுள்ளதாக நடவடிக்கைகளை அரசு மும்முரமாக எடுத்து வருவதாகவும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பழைய ஓய்வூதிய திட்டம்

பழைய ஓய்வூதியத் திட்டத்தில், அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்ற பிறகு, அனைத்து  கொடுப்பனவுகளோடு அவர்கள் கடைசியாக பெற்ற ஊதியத்தில் 50 சதவீதம் ஒவ்வொரு மாதமும் ஓய்வூதியமாக, அரசு ஊழியர்களுக்கு பணி ஓய்வுக்குப் பிறகு மாதா மாதம் உறுதியான, நிலையான வருமானம் இருக்கும். எனினும், இந்த திட்டம் 1-4-2003-க்கு பிறகு அரசு பணிகளில் சேர்ந்தவர்களுக்கு கிடைக்காது.

புதிய ஓய்வூதிய திட்டம்

புதிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ்  ஓய்வூதியம், சலுகைகள், பங்களிப்பின் அளவு, நுழைவு வயது, சந்தாவின் காலம், சந்தாதாரரால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலீட்டு முறை, ஓய்வூதியத்திற்காக பயன்படுத்தப்படும் மொத்த கார்பஸின் சதவீதம், தேர்ந்தெடுக்கப்பட்ட வருடாந்திர விருப்பம் பிற தொடர்புடைய காரணிகள் மற்றும்  முதலீட்டு வருமானம், போன்ற பல்வேறு காரணிகளை சார்ந்தது.

புதிய ஓய்வூதிய திட்ட முறைப்படி அரசு ஊழியர்களின் சம்பளத்தில் 10% தொகை பிடிக்கப்படுகின்றது. இதற்கு ஈடான ஒரு தொகையை அரசு மூலமாகவும் செலுத்தப்படுகிறது. அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும்போது இது அவர்களுக்கு மொத்தமாக வழங்கப்படுகிறது. 2004 முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கும் இந்த ஓய்வூதிய திட்டம் நடைமுறையில் உள்ளது.

பழைய ஓய்வூதிய திட்டம் மற்றும் புதிய ஓய்வூதிய திட்டம்

பழைய ஓய்வூதிய திட்டத்தில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு நிலையான மாத வருமானம் கிடைக்கிறது. புதிய ஓய்வூதியத் திட்டத்தில், மொத்தமான தொகை வாழங்கப்படுகிறது. இப்படி மொத்தமாக பணம் வரும்போது, அதை ஓய்வூதியதாரரின் சொந்தங்கள் பயன்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. ஓய்வீதியதாரருக்கு இதற்கான பலன் கிடைக்காமல் போகவும் வாய்ப்புள்ளது.

மொத்தமாக கிடைக்கும் தொகை தீர்ந்துவிட்டால், பின்னர் வயதான பிறகு அவர்களது செலவுக்கு வழியில்லாமல் போகலாம்,மேலும் ஓய்வூதியதாரர்கள் கவனக்குறைவாக இருந்துவிட்டால், அவர்கள் ஏமாற வாய்ப்புள்ளது.

அரசு ஊழியர்களின் கோரிக்கை

பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் கொண்டு வரப்பட வேண்டும் என அரசு ஊழியர்கள் நீண்ட காலமாகவே  கோரிக்கை விடுத்து வருகின்றன. ஓய்வுக்குப் பிறகு தங்கள் வாழ்க்கைக்கு பாதுகாப்பு அளிக்கும் பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் அமலுக்கு வருவது தான் தங்களுக்கு பொருளாதார பாதுகாப்பை அளிக்கும் என்று அவர்கள் கோருகிறார்கள்.

அரசின் நடவடிக்கை

சமீபத்தில் தமிழகத்தில் நடந்துமுடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பெற்றது. தனது தேர்தல் அறிக்கையில், திமுக, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டு வருவதாக உறுதி அளித்திருந்தது. தற்போது திமுக ஆட்சி அமைந்துள்ள நிலையில், பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் செயல்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. ஊழியர்களின் கோரிக்கையை மதிப்பாய்வு செய்ய அரசு புதிய ஓய்வூதிய திட்டம் குறித்த ஒரு ஆய்வுக் குழுவை அமைத்தது. இந்த குழு தனது அறிக்கையையும் சமர்ப்பித்துள்ளது.

இந்த நிலையில், புதிய ஓய்வூதிய திட்டம் மற்றும் பழைய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் ஒப்பிடுகையில், இரு திட்டங்களும் இயல்பு, கட்டமைப்பு மற்றும் நன்மை ஆகியவற்றில் வேறு என்று மத்திய அரசு முன்னதாகவே குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இந்த இரண்டையும் ஒப்பிட முடியாது என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. OPS என்பது இந்திய அரசாங்கத்தின் வரையறுக்கப்பட்ட ஓய்வூதிய திட்டமாகும். புதிய ஓய்வூதிய திட்டம்  எந்தவொரு வரையறுக்கப்பட்ட நன்மைகளும் இல்லாத ஒரு பங்களிப்பு திட்டமாகும்.

மேலும் படிக்க:

ரூ.55 செலுத்தி, மாதம் ரூ.3,000 ஓய்வூதியம் திட்டம்!

மாஸ்க் பயன்பாடு 74% குறைவு: மத்திய சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவல்!

ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு: முதல்வர் அறிவிப்பு!

English Summary: Good news for Tamil Nadu government employees: Government's new announcement Published on: 17 July 2021, 12:22 IST

Like this article?

Hey! I am T. Vigneshwaran. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.