நீங்கள் தங்க நகை அல்லது நாணயம் அல்லது தங்கப்பட்டை(gold bar) போன்றவற்றில் ஏதேனும் வாங்கும்போது பொருளின் மீது ஒரு ஹால்மார்க் உடன் கடைகளில் பில் கேட்க வேண்டும். மேலும், நகைக்கடைக்காரர் உங்களுக்குக் கொடுத்த பில்லில் சில முக்கியமான தகவல்கள் உள்ளதா என்பதை உறுதிப்படுத்தவும்.
எதிர்காலத்தில் ஏதேனும் பிரச்சினைகள் ஏற்படுமாயின் நீங்கள் பெற்றுள்ள பில்லில் சில முக்கியத்தகவல்கள் இருந்தால் மட்டுமே நீங்கள் மேற்கொண்டு முறையீடு செய்ய இயலும். இதுத்தொடர்பாக Bureau of Indian Standards (BIS) வெளியிட்டுள்ள தகவலின் படி "சில்லறை விற்பனையாளர்/நகைக்கடைக்காரர்களிடம் இருந்து ஹால்மார்க் செய்யப்பட்ட நகையின் உண்மையான பில்கள்/விலைப்பட்டியல் அனைத்து தகவலும் குறிப்பிட்டு இருக்க வேண்டியது அவசியம். ஏதேனும் சர்ச்சை/தவறான பயன்பாடு/புகார் இருப்பின் நிவர்த்திக்கு இது அவசியம்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஹால்மார்க் செய்யப்பட்ட தங்கப் பொருளுக்கு வாங்கப்பட்ட பில்லில் என்ன தகவல் இருக்க வேண்டும்?
BIS இன் படி, நகைக்கடைக்காரர்/சில்லறை விற்பனையாளர் வழங்கும் பில்லில், ஹால்மார்க் செய்யப்பட்ட பொருட்கள் வாங்கப்பட்ட விவரங்கள் முதன்மையாக இருக்க வேண்டும். "உலோகத்தின் நிகர எடை, காரட் தூய்மை மற்றும் நுணுக்கம், ஹால்மார்க்கிங் கட்டணங்கள் ஆகியவை விற்பனைக்கான பில்லில் குறிப்பிடப்பட வேண்டும். மேலும் BIS-ஆல் அங்கீகரிக்கப்பட்ட மதிப்பீடு மற்றும் ஹால்மார்க்கிங் (A&H) மையத்தில் இருந்து ஹால்மார்க் செய்யப்பட்ட நகைகள்/கலைப்பொருட்கள் தரத்தின் தூய்மையினை பரிசோதித்து கொள்ளலாம்.
எடுத்துக்காட்டாக: நீங்கள் 5 கிராம் மதிப்பிலான 22 காரட் தங்க மோதிரத்தை வாங்கினால், நகைக்கடைக்காரர் உங்களுக்குக் கொடுத்த பில்லில் பின்வருவனவற்றைக் கொண்டிருக்க வேண்டும்.
பொருளின் பெயர் விளக்கத்துடன்: தங்க மோதிரம்
அளவு: 1
எடை: 5 கிராம்
மதிப்பு நிலை: 22 காரட் வாங்கும் தேதியில் நிலவும் தங்கத்தின் விலை
ஹால்மார்க்கிங் கட்டணங்கள்: ஏதேனும் ரத்தினம் அல்லது வைரத்தின் மதிப்பு (ஏதேனும் இருந்தால்) பில்லில் கற்களின் விலை மற்றும் எடை பற்றி தனித்தனியாக குறிப்பிடப்பட்ட வேண்டும்.
தங்கத்தின் தூய்மை குறித்து உங்களுக்கு சந்தேகம் இருந்தால், நீங்கள் BIS-ஆல் அங்கீகரிக்கப்பட்ட மதிப்பீடு மற்றும் ஹால்மார்க்கிங் (A&H) மையத்திற்கும் செல்லலாம். சோதனைக்கு கட்டணம் வசூலிக்கப்படும். BIS அங்கீகரிக்கப்பட்ட மதிப்பீடு மற்றும் ஹால்மார்க்கிங் மையங்களின் பட்டியல் கீழே உள்ள இணையதளத்தில் இங்கு காணலாம்.
https://www.manakonline.in/MANAK/AHCListForWebsite
நடுத்தர மக்களின் பெரும்பாலான முதலீடு தங்கத்தை நோக்கித் தான் உள்ளது. அப்படியிருக்கும் பட்சத்தில் பணத்தை நீண்ட காலமாக சேமித்து, முதலீடு செய்யும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய சில விஷயங்களில் விழிப்பாக இருங்கள்.
pic courtesy- mint
மேலும் காண்க:
இன்றும், நாளையும் இடியுடன் கூடிய கனமழை- உங்கள் மாவட்டமும் லிஸ்டில் இருக்கிறதா?
Share your comments