இரயில் பயணம் என்றாலே அனைவருக்கும் பிடித்த மற்றும் சவுகரியமான ஒரு பயணமாக இருக்கின்றது. அதனாலோ என்னமோ தற்போது ரயிலில் டிக்கெட் கிடைப்பதே பெரும் கடினமான செயலாக இருக்கின்றது. இந்த சூழலில் டிக்கெட்டை ஒவ்வொருவரும் IRCTC-யில் தனிக் கணக்கு வைத்துப் பதிவு செய்யும் முறை தொடக்கம் பெற்றது. அப்பதிவு செய்யும் முறையில் தற்போது மாற்றத்தினைக் கொணடுவந்துள்ளது இரயில்வே நிர்வாகம். அது குறித்த விரிவான செய்தியை இப்பதிவில் பார்க்கலாம்.
பொதுவாக, ஒரு IRCTC கணக்கின் வழி ஒரு மாதத்திற்கு 6 டிக்கெட்டுகளை எடுக்க இயலும். அதற்கு மேல் எடுக்க இயலாது. அப்படி, அதிகமான டிக்கெட்டுகளை எடுக்க வேண்டும் என்றால் உங்கள் IRCTC கணக்கை ஆதாருடன் இணைக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், தற்போது ஒரு டிக்கெட் எடுக்க வேண்டும் என்றாலும், ஒவ்வொருவரின் பான் கார்டு, ஆதார் கார்டு அல்லது பாஸ்போர்ட் ஆகிய தகவல்களை உள்ளிட்டு அதன் பின்னர் டிக்கெட் எடுக்க வேண்டும் என்ற நிலையை IRCTC மாற்றப் போகிறது. இச்செயல், இரயில்வே டிக்கெட் எடுக்கும் தரகர்களை விலக்கும் நிலையை நோக்கமாகக் கொண்டு செயல்படுத்தப்பட உள்ளது.
எனவே, இரயில் பயணத்திற்கான டிக்கெட் எடுக்கும் போது அவரவரின் ஆதார் எண், பான் எண் ஆகியவற்றை உள்ளிட்டு எடுக்க வேண்டும் எனக் கூறப்படுகிறது. IRCTC-கணக்குடன் அடையாள ஆவண எண்களை இணைக்கும் திட்டத்தில் இரயில்வே செயல்பட்டு வருவதாக இரயில்வே பாதுகாப்புப் படை இயக்குநர் ஜெனரல் அருண்குமார் தெரிவித்து இருக்கிறார்.
அடையாள எண் இணைத்தல் மூலம் டிக்கெட் முன்பதிவு மோசடியைத் தவிக்க முடியும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஆதார் ஆணையத்துடன், இரயில்வே அமைப்பின் பணி கிட்டத்தட்ட முடிந்துள்ளது என்றும், விரைவில் இச்செயல் முறை புழக்கத்தில் வரும் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.
மேலும், 6049 இரயில் நிலையங்கள் மற்றும் அனைத்து இரயில் பெட்டிகளிலும் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தும் திட்டமும் செயல்படுத்தப்பட உள்ளது எனக் கூறப்படுகிறது.
மேலும் படிக்க
ஏன் ஆதார் அட்டையைக் குடும்ப அட்டையுடன் இணைக்க வேண்டும்? தெரிந்துகொள்ளுங்கள்.!
Share your comments