Rural Development Minister Periyakaruppan
ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் 28 புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
தமிழக சட்டப் பேரவையில் இன்று ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மானியக் கோரிக்கை குறித்த விவாதங்கள் அரங்கேறியது. அந்நேரத்தில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் 28 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் .
1.5,780 கிலோ மீட்டர் நீளம் ஊரக சாலைகளை மேம்படுத்துதல், சீர்படுத்துதல் மற்றும் 121 பாலங்கள் சார்ந்த பணிகள் 2,097 கோடி ரூபாய் மதிப்பில் செய்யப்படும்.
2.நீர் பாசன தேவைகளை நிறைவேற்ற,நிலத்தடி நீரை அதிகரிக்க 1149 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தடுப்பணைகள் உறிஞ்சு குழிகள் கிணறுகள் போன்ற பல பணிகள் மேற்கொள்ளப்படும்.
3.ஏற்கனவே கட்டப்பட்டுள்ள பழைய சமத்துவபுரங்களில் உள்ள வீடுகள், குடிநீர் கட்டமைப்புகள், தெருவிளக்குகள் சீரமைப்பு பணிகள் படிப்படியாக மேற்கொள்ளப்படும்
4.கிராமங்களில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 12,565 நூலகங்கள் புதுப்பிக்கப்படும்.ஊராட்சி 5.நிர்வாகத்தில் உள்ள கணக்குகள் மற்றும் படிவங்கள் எளிமையாக்கப்பட்டு மேலும் 6.முறைப்படுத்தப்படும்.ஊரகப் பகுதிகளில் சுய உதவிக்குழுக்கள், தனிநபர்களுக்கு வாழ்வாதார வாய்ப்புகள் 84.68 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செய்யப்படும்.
- வாழ்வாதாரம் சம்பந்தப்பட்ட விவரங்களை பெறுவதற்கு தொலைபேசி உதவி சேவை மையம் துவக்கப்படும் .
- சிறப்பாக செயல்படும் சமுதாய அமைப்புகளுக்கு மணிமேகலை விருதுகள் வழங்கப்படும் .
- சுய உதவிக்குழுக்களின் உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்த விற்பனையகம் அமைப்பது தனிமுத்திரை பெறுவது மற்றும் மின்னணு வர்த்தக இணைய தளம் உருவாக்குவது போன்ற கோடி ரூபாய் மதிப்பீட்டிற்கு வழிவகை செய்யப்படும்.
- ஊரக தொழில்கள் மேம்படுத்தவும் மகளிர் தொழில் முனைவோருக்கு உரிய சேவைகள் வழங்கவும் 30 ஓரிட சேவை மையங்களும் 7 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்படும்.
- 31900 மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு 1.86 கோடி ரூபாய் மதிப்பில் திறன் பயிற்சி அளிக்கப்படும்.
- கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறம் ஆகிய இடங்களில் 20 ஆயிரம் இளைஞர்களுக்கு சுய வேலைவாய்ப்பு அமைத்து தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறுவதற்கு தேவையான பயிற்சிகள் வழங்குவதற்கு 87.80கோடி ரூபாய் வழங்கப்படும்.
- இயற்கை வளம் மற்றும் பல்லுயிர் வன்மத்தை பேணிக் காக்க உள்ளூர் சுய உதவி குழு பெண்களுக்கு இரண்டு கோடி ரூபாய் மதிப்பீட்டில் திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படும்.
- உள்ளூர் சுய உதவிக் குழுக்களின் வாழ்வாதார நடவடிக்கைகளில் மிக முக்கிய தேவையாக கருதப்படும் பொது உள்கட்டமைப்பு வசதிகளை கொண்ட வாழ்வாதார பூங்காக்கள் உருவாக்கப்படும்.
- 916.75 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஊரகப் பகுதி சொத்துக்களை உருவாக்கி அடிப்படை வசதிகள் செய்துதரப்படும்.
- 550 கிராம ஊராட்சி அலுவலகக் கட்டிடங்கள், 15 ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டிடங்கள் மற்றும் 500 அங்கன்வாடி மைய கட்டிடங்கள் 233.25 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும்.
- திட்ட கண்காணிப்பு பணி வலுப்பெற மாவட்டம் மற்றும் வட்டார அளவிலான அலுவலர்களுக்கு 68 புதிய வாகனங்கள் வழங்கல் செய்யப்படும்.
- ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு மாதாந்திர மதிப்பூதியம் 1000 ரூபாய் தற்போது 2,000 ரூபாயாக உயர்த்தப்படும்.
- சுகாதாரத்தில் சிறப்பாக செயல்படும் கிராமங்களுக்கு முன்மாதிரி கிராம விருது வழங்கப்பட்டு மாவட்டத்திற்கு ஒரு கிராம ஊராட்சி என்ற கணக்கில் 37 கிராம ஊராட்சிகளுக்கு தலா 7.5 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையும் கேடயமும் வழங்கப்படும் மற்றும் மாநில அளவில் சிறப்பாக செயல்படும் 3 முன்மாதிரி கிராம விருதுகள் வழங்கப்பட்டு கேடயமும் தலா 15 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையும் வழங்கப்படும்
- பாதுகாக்கப்பட்ட குடிநீரை உறுதி செய்யும் பொருட்டு நீரின் தரத்தை பரிசோதிப்பதற்காக சுய உதவிக்குழுவில் உள்ள பெண்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். ரூபாய் 10.92 கோடி மதிப்பீட்டில் 12,525 ஊராட்சிகளில் மகளிர் சுய உதவிக் குழுக்களை சேர்ந்த 62,625 பெண்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்படும்.
- மகளிர் மற்றும் குழந்தைகள் ஊட்டச்சத்தினை உறுதி செய்ய இரண்டு லட்சம் ஊட்டச்சத்து தோட்டங்கள் அமைப்பதற்கு ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடப்படும்.
- 5000 மகளிர் விவசாயிகளை உள்ளடக்கிய 50 இயற்கை விவசாய தொகுப்புகள் உருவாக்கப்படும்.
- கிராமப்புறத்தில் வேளாண் தோட்டக்கலை கால்நடை பராமரிப்பு போன்ற இணை தொழில்கள் 37 கோடி ரூபாய் மானிய செலவில் 185 பண்ணை தொகுப்புகளாக செயல்படுத்தப்படும்.
- 1860 தனிநபர் மற்றும் 2717 குறு தொழில் நிறுவனங்களை உருவாக்க ஊரகத் தொழில் முனைவு ஏற்படுத்த 51.25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிதி கொடுக்கப்படும்.
- மகளிர் சுய உதவிக்குழுக்கள் அமைக்கும் உற்பத்தியாளர் குழுக்களை உருவாக்கி உற்பத்தி மற்றும் வருமானத்தினை அதிகரிக்க 100 சான்று பெற்ற விதை உற்பத்தி தொகுப்புகளுக்கு 2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு வழங்கப்படும்.
- மகளிர் சுய உதவிக்குழுக்கள் பொருத்தவரை நுண் மற்றும் குறுந்தொழில் நிறுவனங்கள் பங்கு மூலதனம் மூலம் செம்மைப் படுத்துதல் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்த 36 சிறு தொழில் தொகுப்புகளுக்கு 10.80 கோடி ரூபாய் நிதி மானியமும் வழங்கப்படும்.
- சுய உதவிக்குழுக்கள் மற்றும் சமுதாய அமைப்புகளுக்காக 188கோடி ரூபாயில் சுழல் நிதி மற்றும் சமுதாய நிதி கொடுக்கப்படும்.
- கிராம ஊராட்சி செயலார்களுக்கு மகப்பேறு விடுப்பை உயர்த்தி வழங்கப்படும்” அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
மேலும் படிக்க:
தமிழகத்தில் 29 புதிய நகராட்சிகள் இதோ!
TN Earthquake: 5.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்! சென்னை மக்கள் அதிர்ச்சி!
Share your comments