Old Pension Scheme Latest Update: 1.36 லட்சம் ஊழியர்கள் பயனடையும் வகையில் ஓய்வூதியம் வழங்குவதற்கான விதிமுறைகள், நிபந்தனைகள், எஸ்ஓபி முதலானவைகளை உரிய நேரத்தில் நிதித்துறை வெளியிடும் எனக் கூறப்படுகிறது. விரிவான தகவலை இப்பதிவு வழங்குகிறது.
மேலும் படிக்க: விவசாயத்தில் சந்தேகமா? இனி இந்த எண்ணிற்கு அழைங்க!!
சுமார் 1.36 லட்சம் ஊழியர்கள் பயனடையும் என்ற நிலையில் இமாச்சலப் பிரதேச மாநிலம் ஓய்வூதியம் வழங்குவதற்கான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் மற்றும் எஸ்ஓபியை உரிய நேரத்தில் நிதித்துறை வெளியிடும் என்று தகவல்கள் பல தெரிவிக்கின்றன. இமாச்சலப் பிரதேசத்தின் அனைத்து அரசு ஊழியர்களும் இப்போது புதிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் வருவார்கள் எனக் கூறப்படுகிறது. அதோடு, அவர்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தின் பலன்களைப் பெறுவார்கள் என அரசு தெரிவித்து இருக்கிறது.
மேலும் படிக்க: 7th Pay Commission: அரசு ஊழியர்களுக்கு சம்பளம் அதிகரிக்கப்படுமா? எப்போது?
இமாச்சலப் பிரதேச மாநில தலைமைச் செயலர் பிரபோத் சக்சேனாவின் அலுவலகம் வெளியிட்ட குறிப்பு ஒன்றில், இந்த முடிவினைச் செயல்படுத்துவதற்கான வழிமுறைகள் மற்றும் நிலையான செயல்பாட்டு நடைமுறையினை(SOP) அறிவிக்குமாறு நிதித் துறைக்கு உத்தரவிடப்பட்டு இருக்கிறது.
பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு ஒப்புதல் என்பது அரசின் இந்த முடிவால் சுமார் 1.36 லட்சம் ஊழியர்கள் பயனடைவார்கள். அதற்கான விதிமுறைகள், நிபந்தனைகள் மற்றும் எஸ்ஓபியை உரிய நேரத்தில் நிதித்துறை வெளியிடும் எனச் சொல்லப்பட்டுள்ளது. தேர்தல் வாக்குறுதிகளில் பழைய ஓய்வூதியம் மாநிலத்தில் செயல்படுத்தப்படும் எனக் காங்கிரஸ் கட்சி கூறி இருந்தது.
தேர்தல் வாக்குறுதியினை நிறைவேற்றும் நிலையில், காங்கிரஸ் ஆளும் அரசு, தனது முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் பழைய ஓய்வூதியத் திட்டத்தினை (Old Pension Scheme) மீட்டெடுக்க ஒப்புதல் அளித்தது.
பெண்களுக்கு மாதம் ₹1500 வழங்க முடிவு இருப்பதாகக் கூறப்படுகிறது. இது தவிர, 18 முதல் 60 வயது வரையிலான பெண்களுக்கு மாதம் 1,500 ரூபாய் உதவித்தொகை வழங்குவதற்கான திட்டத்தினைத் தயாரிக்கவும், ஒரு மாதத்தில் ஒரு லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கான சாத்தியக்கூறுகளைப் பரிசீலிக்கவும் அமைச்சரவையின் துணைக் குழுக்களும் அமைக்கப்பட்டு இருக்கின்றன. ஜனவரி 1, 2004 முதல், அரசுப் பணியில் சேரும் ஊழியர்கள் புதிய ஓய்வூதிய முறையின் (NPS) கீழ் வருவார்கள் எனக் கூறப்படுகிறது.
ஓய்வூதியத் திட்டம் மாநிலங்களின் பொறுப்பை அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது. ரிசர்வ் வங்கியின் அறிக்கையின் அடிப்படையில், சில மாநிலங்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தினை அமல்படுத்துவது குறித்துப் பரிசீலித்து வருகின்றன. இதன் காரணமாக, மாநில அளவில் நிதிச்சுமைக் கூடும். எதிர்காலத்திற்கான செலவினங்களை அதிகரிப்பதை தவிர்க்க வேண்டும், என ரிசர்வ் வங்கி கேட்டுக் கொண்டு இருக்கிறது.
மேலும் படிக்க
Share your comments