இந்தியாவில் உள்ள விவசாயிகளுக்கு உதவுவதற்காக நிறைய திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. அதில் மிக முக்கியமான ஒரு திட்டம்தான் பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா (பிஎம் கிசான்) திட்டம். இத்திட்டத்தின் கீழ் தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 6000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது. ஒரு தவணைக்கு 2000 ரூபாய் என ஒரு ஆண்டுக்கு மூன்று தவணைகள் வழங்கப்படுகிறது.
விவசாயிகளுக்கு பென்சன் (Pension for Farmers)
பிஎம் கிசான் திட்டம் விவசாயிகளிடையே வரவேற்பைப் பெற்றிருந்தாலும் மூன்று மாதங்களுக்கு மட்டுமே 2000 ரூபாய் கிடைக்கிறது என்பதால் இதை விட பெரிய தொகையை எதிர்பார்க்கின்றனர். இத்திட்டத்தில் வழங்கப்படும் நிதியுதவி உயர்த்தப்பட வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கின்றனர். அப்படிப்பட்ட சூழலில் விவசாயிகளுக்கு மற்றொரு திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதுவொரு பென்சன் திட்டமாகும்.
இந்தியாவில் பல்வேறு தரப்பினருக்கு பென்சன் தரும் திட்டங்கள் நிறைய இருந்தாலும் விவசாயிகளுக்கு அத்திட்டம் உதவும் வகையில் இல்லை. அவர்களுக்காகவே உருவாக்கப்பட்ட திட்டம் தான் பிரதான் மந்திரி கிசான் மாந்தன் யோஜனா. 18 வயது முதல் 40 வயது வரையில் உள்ள விவசாயிகள் இத்திட்டத்தில் இணைந்து பயன்பெறலாம். 60 வயது முடிந்த பிறகு பென்சன் பணம் வந்துசேரும்.
பிரீமியம் தொகையைப் பொறுத்தவரையில், 18 வயதாக இருக்கும்போதே இத்திட்டத்தில் இணைந்தால் ஒவ்வொரு மாதமும் 55 ரூபாய் பிரீமியம் செலுத்த வேண்டும். 30 வயதில் இணைந்தால் ஒவ்வொரு மாதமும் ரூ.1,000 செலுத்த வேண்டும். இவ்வாறாக, திட்டத்தில் இணையும் வயதைப் பொறுத்து பிரீமியம் இருக்கும். maandhan.in என்ற வெப்சைட்டில் சென்று இத்திட்டத்தில் விண்ணப்பிக்கலாம். ஆதார் கார்டு, வங்கிக் கணக்குப் புத்தகம், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ போன்றவை தேவைப்படும்.
மேலும் படிக்க
பென்சனர்களுக்கு சூப்பர் வசதி: இனிமே ஈசியா இதை செய்யலாம்!
பென்சனர்களுக்கு கடன் வசதி: அமுலுக்கு வந்தாச்சு புதிய திட்டம்!
Share your comments