சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பொங்கல் பண்டிகைக்கு வேட்டி, சேலை வழங்குவது குறித்துக் கைத்தறி துறை அமைச்சருடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகைக்குக் குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா வேட்டி சேலை தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.
வரும் ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் விலையில்லா வேட்டி மற்றும் சேலை வழங்குவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகின்றது. 2023ஆம் ஆண்டுக்கான வேட்டி, சேலை உற்பத்திக்காக முதல் தவணையாக ரூ.243.96 கோடியை ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதோடு, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 1.80 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு வில்லையில்லா வேட்டி, சேலை வழங்கப்பட உள்ளது என்றும் இந்த திட்டத்தை ஜனவரி 10ஆம் தேதிக்குள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் கடந்த 10 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி சேலைகளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதில் 15 டிசைன்களில் மற்றும் பல நிறங்களில் சேலையும் 5 டிசைன்களில் வேட்டியும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், பொங்கல் பரிசு பரிசு குறித்து விவாதிக்கப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் படிக்க
Scholarship: கல்லூரி மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை அறிவிப்பு!
Share your comments