கர்பிணிப் பெண்கள் தங்களது விவரங்களை இணையதளத்தில் பதிவு செய்து அடையாள எண் பெற்றுக் கொள்ளலாம் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்திருக்கிறார். இது குறித்த விரிவான தகவல்களை இப்பதிவில் பார்க்கலாம்.
தமிழகத்தில் பேறு காலக் கண்காணிப்பு இணையதளமான பிக்மி (TN PICME) கர்ப்பிணிகளின் கர்ப்பக் கால விவரங்களைப் பதிவு செய்தல் மற்றும் மகப்பேறு இறப்பு விகிதம் மற்றும் சிசு இறப்பு விகிதத்தினைக் குறைப்பதற்கான நோக்கத்துடன் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. பிக்மி (TN PICME) இணையதளம் ஏபரல் 2008-இல் தேசிய தகவலியல் மையத்தால் உருவாக்கப்பட்டது. ஆண்டுதோறும் 11 லட்சம் தாய்மார்களின் தகவல்கள் பிக்மி இணையதளத்தில் பதிவு செய்யப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: விவசாயிகளுக்கு ரூ. 8000 ஊக்கத்தொகை! இன்றே விண்ணப்பியுங்க!!
தாய்மார்களுக்கு தஇஏ எண் என்ற தனிப்பட்ட அடையாள எண் வழங்கப்பட்டுகிறது. இதன் மூலம் கர்ப்பப் பதிவு முதல் குழ்ந்தை பிறந்து 5 ஆண்டுகள் வரை தாய்சேய் நலச் சேவை விவரங்கள் பிக்மியில் பதிவு செய்யப்படுகின்றது. தமிழக அரசால் பிறப்புச் சான்றிதழ் பெறுவதற்குத் தாய்மார்களுக்கு அடையாள எண் அவசியமாக்கப்பட்டுள்ளது. தற்போது கிராமச் சுகாதாரச் செவிலியர் மூலம் கர்ப்பப் பதிவு செய்து அடையாள எண் வழங்கப்பட்டு வருகின்றது என்பது குறிக்க்கத்தக்கது.
மேலும் படிக்க: 7th Pay Commission: அரசு ஊழியர்களுக்கு இரட்டை மகிழ்ச்சி! குவியும் சலுகைகள்!!
இந்த நிலையில், தாய்மார்கள் அடையாள எண் பெறுவதை மேலும் எளிதாக்கும் பொருட்டு picme.tn.gov.in இணையதளத்தில் கர்ப்பிணித் தாய்மார்கள் தாங்களே சுயப் பதிவு செய்து கொள்ளலாம். அதன் மூலம் அடையாள எண் பெறும் வசதி கடந்த மே மாதம் 27-ஆம் தேதி தொடங்கப்பட்டது. அடையாள எண் சுயப் பதிவு வசதி தொடங்கப்பட்ட நாள் முதல் ஜூன் 30 வரை 230 கர்ப்பிணித் தாய்மார்கள் இவ்விணையதள வசதியைப் பயன்படுத்தித் தங்கள் கர்ப்பத்தினைச் சுயப் பதிவு செய்து தங்களுக்கான தனிப்பட்ட அடையாள எண் பெற்றுள்ளனர்.
அனைத்துக் கர்ப்பிணி தாய்மார்களும் எவ்வித சிரமமும் இல்லாமல் தங்களுக்கான தனிப்பாட்ட அடையாள எண்ணைச் சுயப் பதிவு வசதியைப் பயன்படுத்திப் பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுயப் பதிவு பற்றிய விவரங்களை அறிந்து கொள்வதற்கு யூடியூப் இணைப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று செய்திக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.
மேலும் படிக்க
Share your comments