கோலம் போடுவது நாம் பூமிக்கு செய்யும் மரியாதை எனக் கூறப்படுகிறது. கூடுதலாக அரிசி மாவினால் இடும் கோலம் வாயில்லா ஜூவராசிகளுக்கு உணவாகவும் இருக்கிறது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இந்த பதிவில் அழகழகான கோலங்களைப் பார்க்கலாம்.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகை கொண்டாட்டம் களை கட்டி உள்ளது. பொதுவாக, தமிழர்களுடைய வாழ்க்கை முறை என்பது இயற்கையோடு இயைந்தது அகும். அந்தவகையில் அனைத்து பிரபஞ்ச செயல்பாடுகளுக்கும் ஆதாரமாக இருக்கும் சூரிய பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தமிழ் மக்களால் இந்த பண்டிகை கொண்டாடப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
பாரம்பரியமாகவே தமிழகத்தில் எந்த ஒரு பண்டிகை வந்தாலும், வீட்டு வாசலில் சாணம் தெளித்து கோலம் இடுவது வழக்கம் ஆகும். அதிலும் குறிப்பாக தென் மாவட்டங்களில் பொங்கல் முந்தைய நாள் இரவு, பெண்கள் இரவு முழுவதும் விழித்து வீட்டு, வாசல்களில் விதவிதமாக கோலம் வரையலாம்.
கோலம் போடுவது நாம் பூமிக்கு செய்யும் மரியாதை. கோலம், வீட்டிற்கு லஷ்மி கடாட்சத்தை கொடுக்கிறது. அதோடு, மும்மூர்த்திகளின் ஆசிகளும் நமக்கு கிடைக்கும். கூடுதலாக அரிசி மாவினால் இடும் கோலம் வாயில்லா ஜூவராசிகளுக்கு உணவாகவும் இருக்கின்றது.
கோலத்தின் நடுவில் சாணம் வைத்து, பூசணி பூ வைக்கும் போது மகாலட்சுமி மனம் மகிழ்ந்து நம் வீட்டுக்குள் வருவாள் என்பது ஐதீகம் என்பதை மறுப்பதற்கில்லை.
மேலும் படிக்க
Pongal Bonus: அரசு ஊழியர்களுக்குப் பொங்கல் ஊக்கத்தொகை அறிவிப்பு!
பொங்கலுக்குச் செங்கரும்பு அறுவடை தீவிரம் - மகிழ்ச்சியில் விவசாயிகள்!
Share your comments