போஸ்ட் ஆபிசின் ரெக்கரிங் டெபாசிட் திட்டத்தின்கீழ் ஒவ்வொரு மாதமும் ரூ.10,000 முதலீடு செய்தால், 10 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ.16 லட்சம் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது. இந்த திட்டம் குறித்த விரிவான தகவலை இப்பதிவு விளக்குகிறது.
போஸ்ட் ஆபீஸின் ஆர்டி திட்டத்தில் குறைந்தப்பட்சமாக வெறும் ரூ.100 முதலீடு செய்யலாம் எனக் கூறப்படுகிறது. இதில் முதலீடு செய்ய அதிகபட்ச வரம்பு நிர்ணயம் செய்யப்படவில்லை என்பது நோக்கத்தக்கது. இந்த திட்டத்தில் நீங்கள் விருப்பத்திற்கு ஏற்ப ஒரு வருடம், இரண்டு ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகளுக்கு முதலீடு செய்து கொள்ளலாம். இதில் ஒவ்வொரு காலாண்டிலும் முதலீடு செய்யப்படுகின்ற தொகைக்கு வட்டி கிடைக்கும்.
ஒவ்வொரு காலாண்டின் இறுதியிலும், வட்டித் தொகை மற்றும் கூட்டு வட்டி என இருண்டும் கணக்கில் வரவு வைக்கப்படும். தற்போது இந்த திட்டத்தில் முதலீடு செய்யும் தொகைக்கு 5.8 சதவீத வட்டி வழங்கப்படுகின்றது. இந்த திட்டத்தில் நீண்ட காலம் முதலீடு செய்தால் திட்டத்தின் முதிர்வில் லட்சக்கணக்கணக்கில் பணத்தைப் பெறலாம் எனக் கூறப்படுகின்றது.
இந்த திட்டத்தில் 18 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்களும் தங்கள் கணக்கினைத் தொடங்கிக் கொள்ளலாம். ஒவ்வொரு மாதத்திலும் இதில் ரூ.10,000 முதலீடு செய்தால், 10 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ.16 லட்சம் தொகை கிடைக்கும். அதாவது ஒவ்வொரு மாதமும் ரூ.10,000 டெபாசிட் செய்யும்போது அது ஒரு வருடத்தில் ரூ.1,20,000 ஆக இருக்கும்.
இதில் 10 ஆண்டுகள் முதலீடு செய்ய வேண்டும். அந்த 10 ஆண்டுகள் முடிவில் ரூ.12,00,000 ஆக முதலீடு என்பது இருக்கும். பின்னர் திட்டம் முதிர்வடைந்த பிறகு ரூ.4,26,476 கிடைக்கும். இதன் மூலம் 10 ஆண்டுகளுக்குப் பின்பு மொத்தம் ரூ.16,26,476 கிடைக்கும். இந்த திட்டத்தில் 12 தவணைகள் நீங்கள் கட்டும் பட்சத்தில் மொத்த தொகையில் 50% கடனாக பெறலாம் எனவும் கூறப்படுகிறது.
மேலும் படிக்க
Share your comments